இலவச மிக்சி, கிரைண்டர், ஃபேன் கொடுத்து ரூ. 8 ஆயிரம் கோடி ஊழல் செய்த ஜெ.,: குஷ்பு திடுக் புகார்
பெரம்பலூர்: தமிழக மக்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர் வழங்கியதன் மூலம் அதிமுக அரசு ரூ.8 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளது என்று தேர்தல் பிரசாரத்தில் குஷ்பு குற்றம் சாட்டி உள்ளார்.
திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு, தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
பெரம்பலூர் தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளரும், சமூக சமத்துவப்படை கட்சியின் தலைவருமான முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவகாமியை ஆதரித்து பெரம்பலூரில் குஷ்பு பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் எந்தவித வளர்ச்சியும் இல்லை என்று கூறினார். தமிழகம் மதுவிற்பனையில் இந்தியாவிலேயே முதல் இடத்தில் உள்ளது. டாஸ்மாக் மதுபானத்தை குடித்து பல லட்சம் குடும்பங்கள் சீரழிந்துவிட்டதாக கூறினார்.

இலவச பொருட்களில் ஊழல்
அ.தி.மு.க. ஆட்சியில் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி தருகிறோம் என்று கூறி ரூ.1,200 மதிப்புள்ள பொருட்களை இலவசமாக கொடுத்துவிட்டு அதன்மூலம் ரூ.8 ஆயிரம் கோடி லஞ்சம் பெற்றுள்ளனர். இதேபோல் ரூ.350 மதிப்புள்ள செல்போனை இலவசமாக தருகிறோம் என்று கூறி ஏமாற்ற பார்க்கிறார்கள்.

பணத்தின் மீது பாசம்
ஜெயலலிதாவிற்கு மக்கள் மீது பாசம் இல்லை. பணத்தின் மீதுதான் பாசம் உள்ளது. தேர்தலையொட்டி அ.தி.மு.க.வினரிடம் இருந்து ரூ.100 கோடி வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் ஊழல் பணம் தான்.

6வது முறை முதல்வர்
முதல்வர் ஜெயலலிதா மக்கள் பிரச்னைகளை கண்டு கொள்ளவே இல்லை. மக்கள் பிரச்னை என்ன என்று தெரிந்து கொண்டு அதற்கு தீர்வு காண 93 வயதிலும் முயற்சி செய்பவர் கலைஞர் கருணாநிதி என்றால் அது மிகையாது. தேர்தலுக்கு பின்னர் 6வது முறையாக கருணாநிதி முதலமைச்சராக பதவியில் அமர்வார் என்றார்.

சிந்தித்து ஓட்டு போடுங்கள்
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஆவின்பால் விலை ஒரு லிட்டருக்கு ரூ.7 குறையும். மின்கட்டணத்தை மாதந்தோறும் கட்டலாம். மக்கள் இந்த தேர்தலில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் மக்கள் மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். அதன்படி தி.மு.க. கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்றார் குஷ்பு.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications