தேனியில் நிழற்குடை மீது மரம் விழுந்து 5 பேர் பரிதாப பலி!
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி மாவட்டம் கம்பம் அருகே பேருந்து நிழற்குடை மீது பலத்த மழை காரணமாக ஆலமரம் விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது நாராயணதேவன்பட்டி. இங்கு நேற்று பலத்த மழை பெய்தது. அப்போது அங்குள்ள பேருந்து நிழற்குடை மீது அருகில் இருந்த ஆலமரம் சரிந்து விழுந்தது.
இந்த விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகினர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும், விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications