பரபரப்பு சம்பவம்.. ஆறுமுகசாமி ஆணையம் வாசலிலேயே திருப்பி அனுப்பப்பட்ட முன்னாள் கமிஷனர் ஜார்ஜ்!
சென்னை: சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் இன்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு குறுக்கு விசாரணைக்காக வருகை தந்த நிலையில், அவர் திருப்பி அனுப்பப்பட்டார்.
ஜெயலலிதா மறைந்தபோது சென்னை போலீஸ் கமிஷனராக இருந்தவர் ஜார்ஜ். எனவே ஜெ. மறைவு குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி கமிஷன் சம்மனை ஏற்று, ஆணையத்தின் முன்னிலையில், ஜார்ஜ் ஏற்கனவே ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.
குட்கா விவகாரம் தொடர்பாக சிபிஐ ஜார்ஜ் இல்லத்தில் 25 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து சோதனை மேற்கொண்ட நிலையில் நேற்று அவர் வெளிநாட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

குறுக்கு விசாரணை
ஆனால், இன்று காலை ஜார்ஜ், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராக வந்திருந்தார். இன்று குறுக்கு விசாரணைக்காக அவருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. ஆனாலும், அந்த தேதி மாற்றப்பட்டு மீண்டும் இன்னொரு நாளில் அவர் நேரடியாக வந்து குறுக்கு விசாரணையில் பங்கேற்க வேண்டும் என்று, இமெயில் வாயிலாக, சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

தெரியாமல் போனார்
ஆனால் அதைப் பார்க்காமலேயே நேரடியாக ஆறுமுகசாமி ஆணையத்திற்கு சென்றுள்ளார் ஜார்ஜ். ஆனால் ஆறுமுகசாமி கமிஷன் தரப்பிலிருந்து இன்று உங்களுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு இன்று நாள் ஒதுக்கப்படவில்லை என கூறிவிட்டனர்.

திரும்பி சென்றார்
இதையடுத்து, அவர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார். சிபிஐ அதிகாரிகள் ஜார்ஜ் வீட்டில் சோதனை மேற்கொண்டுவிட்டு இன்று காலையில் புறப்பட்டுச் சென்றார்கள். அப்படியான நிலையில் அவர் நேற்று வெளிநாட்டில் இருப்பதாக வெளியான தகவல் பொய் என்பது இப்போது தெரியவந்துள்ளது.

சிபிஐ பிடியில் ஜார்ஜ்
ஜார்ஜ் நேற்று சென்னையில் இருந்தால் சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்த வாய்ப்பு அதிகமாக இருந்த நிலையில், அவர் வெளிநாட்டில் இருப்பதாக தகவல் பரவியது. ஆனால், ஜார்ஜ் இன்று ஆறுமுகசாமி விசாரணைக்கு நேரில் ஆஜராக வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications