மழை வெள்ளத்தில் கார், டூவீலர் பழுதா? உடனே இந்த எண்களை அழையுங்க.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் கார், டூவீலர்கள் தண்ணீரில் மூழ்கி பழுதாகி உள்ளன. இந்நிலையில் தான் கார், டூவீலர்களை பொதுமக்கள் எளிமையாக பழுது பார்த்து கொள்ள வசதியாக தமிழக அரசு முக்கிய நிறுவனங்களின் கட்டணமில்லா தொலைபேசி எண்களை வழங்கி உள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்தது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் உள்ளிட்ட 4 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களின் கார், டூவீலர்களில் மழைநீர் புகுந்துள்ளது.

இதனால் வாகனங்கள் பழுதாகி உள்ளன. இந்நிலையில் தான் தற்போது மழை வெள்ளம் வடிந்துள்ள நிலையில் பொதுமக்கள் தங்களின் வாகனங்களை பழுது பார்க்க ஷோரூம் மற்றும் மெக்கானிக் கடைகளை நாடி வருகின்றனர்.
இந்நிலையில் தான் மழை வெள்ளத்தால் பழுதான வாகனங்களை பழுது பார்ப்பது தொடர்பா கட்டணமில்லா தொலைபேசி எண்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம் புயலினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பட்டது. அதுமட்டுமல்லாமல் வெள்ளம் தேங்கியிருந்த பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு, மூன்று மற்றும் நான் சக்கர வகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவ்வானகங்களுக்கு பழுது நீக்கம் செய்யவும், உரிய இழப்பீடு வழ்கவும் வாகனத்தயாரிப்பு, நிறுவனங்கள் டீலர்கள் மற்றுமு் காப்பீட்டு நிறுவனங்களுடன் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றியட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வுருகிறது.
மேலும் 8.12.2023 அன்று நிதி அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலும் வாகனத்தயாரிப்பு நிவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்ட கூட்டத்திலும் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டன. அதன்படி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அனைத்து வாகன தயாரிப்பு நிறுவனங்களன் சர்வீஸ் சென்டர்கள் மற்றும் டீலர்களின் சர்வீஸ் சென்டர்கள் அனைத்தும் உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு பழுது நீக்கப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தில் மூழ்கியிருந்த வாகனங்களை எக்காரணம் கொண்டும் இயக்க வேண்டாம் எனவும் அவற்றின் என்ஜினனை ஆன் செய்யாமல் மீட்பு வாகனங்கிளன் சர்வீஸ் சென்டர்களுக்கு கொண்டு வருமாறம் பாதிககப்பட்ட பகுதகிளில் இருந்த வாகன உரிமையாள்களின் அலைபேசி எண்களுக்கு தயாரிப்பு நிறுவனங்களின் முகவர்கள் மற்றுமு் காப்பீட்டு நிறுவனங்கள் சார்பில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட குறுஞ்செய்திகளும், வாட்ஸ்ஆப் செய்திகளிலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து தொடர்புடைய நிறுவனங்கள் விரிவான பத்திரிகை செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். வாகன உரிமையாளர்கள் எளிதில் தொடர்பு கொள்ள டோல் ப்ரீ எண்கள் மற்றும் 24 மணிநேரமும் இயங்கக்கூடிய சாலையோர உதவி வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் சென்னை முழுவதும் மொபைல் சர்வீஸஅ முகாம்களை தொடங்கி நடத்தி வருகிறது. டிசம்பர் 18 வரை இந்த முகாம் சென்னையில் மழை பாதிப்பு பகுதிகளில் நடைபெற உள்ளது.
டிவிஎஸ் நிறுவனம் சென்னை முழுவதிலும் 68 இடங்களில் சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அதோடு பொதுமக்கள் தங்களின் வாகனங்கள் தண்ணீரில் மூழ்கி பழுதாகி இருந்த டோல் ப்ரீ எண்களை அழைக்கலாம். அதன்படி ராயல் என்பீல்ட் 1800 2100 007, யமஹா 1800 4201 600, டிவிஎஸ் 1800 2587 555, ஹோண்டோ 1800 1033 434, சுசுகி 1800 1217 996, மாருதி சுசுகி 1800 1800 180 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். மேம் லான்சன் டொயட்டா 1800 1020 909, 1800 2090 909, கியா மோட்டார்ஸ் 1800 1085 000, ஹுண்டயாய் 1800 1024 645, டாட மோட்டார்ஸ் 1800 209 8282, டொயட்டோ 1800 102 50001 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
மேலும் வாகன உரிமையாளர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்களை எக்காரணம் கொண்டும் இயக்கிவிடக்கூடாது. இதை மீறினால் அது மிகப்பெரிய செலவை பழுதை வரவழைக்கும். டோல்ப்ரீ எண்களை தொடர்பு கொண்டால் குறிப்பிட்ட நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மீட்பு வாகனத்தில் வந்து வாகனங்களை எடுத்து சென்று பழுது நீக்கி வழங்குவார்கள். மேலும் பழுதான வாகனங்களின் பாதிப்பின் தன்மை ற்றும் வாகன பதிவு எண் தெளிவாக தெரியும்படி புகைப்படங்களை எடுத்து தங்களது காப்பீடு கோரும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். மேலும் இந்த டோல்ப்ரீ எண்களை தொடர்பு கொள்வதன் மூலம் குறிப்பிட்ட நிறுவன ஊழியர்களை தொடர்பு கொண்டு சிறப்பு மற்றும் நடமாடும் முகாம்களை அறிந்து அதன்மூலம் வாகனங்களை பழுது நீக்கி கொள்ள முடியும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications