மெரினா போராட்ட அனுமதிக்கு எதிராக அரசு அப்பீல்.. அவசர வழக்காக விசாரிக்கிறது ஹைகோர்ட்
மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதித்ததை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
Recommended Video

சென்னை: மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதித்ததை எதிர்த்து தமிழக அரசு சென்னை ஹைகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சென்னை மெரினாவில் ஒருநாள் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. மெரினாவில் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணு தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

காவிரி மேலாண்மை வாரியம் கோரி மெரினாவில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அமெரிக்க வெள்ளை மாளிகை முன் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.
இந்நிலையில் போராட்டத்திற்கு நீதிமன்றம் அனுமதி அளித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. போராட்டம் நடத்த அனுமதித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அய்யாக்கண்ணு வழக்கில் ஒரு நாள் அமைதி போராட்டம் நடத்த நீதிபதி ராஜா அனுமதித்திருந்தார். இதை எதிர்த்து தமிழக உள்துறை செயலர், காவல்துறை இயக்குநர் தமிழக அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
போராட்டம் நடத்த அய்யாக்கண்ணுக்கு அனுமதி கொடுத்தால் மற்ற 25 சங்கங்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் வாதிட்ட அரசு தரப்பு வக்கீல் இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதனை ஏற்றுக் கொண்ட ஹைகோர்ட் 5.15 மணிக்கு தமிழக அரசின் மேல்முறையீட்டு அவசர வழக்காக விசாரிக்கிறது.












Click it and Unblock the Notifications