தொடரும் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. உயர்கல்வித்துறை செயலாளராக அருண் ராய் நியமனம்
சென்னை: தமிழகத்தில் இன்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி உயர்கல்வித்துறை செயலாளராக அருண் ராய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை செயலாளராக சுப்பையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெகவின் ஆட்சி அமைந்துள்ளது. முதல்வராக விஜய் பதவியேற்றுள்ளார். இதையடுத்து தமிழக அரசின் நிர்வாகச் சீரமைப்பு மற்றும் திட்டச் செயலாக்க வேகத்தை அதிகரிக்கும் நோக்கில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தொழில், முதலீட்டுத்துறை செயலாளராக விஜயகுமார் நியமனம்
உயர்கல்வித்துறை செயலாளராக அருண் ராய் நியமனம்
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை செயலாளராக சுப்பையன் நியமனம்
டெல்லி தமிழ்நாடு இல்ல உறைவிட ஆணையராக ஜெயா நியமனம்
சுற்றுலாத்துறை ஆணையராக சண்முகம் நியமனம்
மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை, தகவல்துறை செயலாளராக அருண் தம்புராஜ் நியமனம்
சேலம் ஆட்சியராக இளம்பகவத் நியமனம்
கலை மற்றும் கலாச்சாரத்துறை இயக்குநராக பிரிந்தாதேவி நியமனம்
தமிழ்நாடு குடிமைப்பொருள் விநியோகக் கழக தலைவராக உமாநாத் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications