கலப்பட பால் விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கலப்படப் பாலை தடை செய்ய கோரும் வழக்கில், அரசின் நடவடிக்கை குறித்து அறிக்கையளிக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கார்த்திகேயன் என்ற சட்டக் கல்லூரி மாணவர் தொடர்ந்த வழக்கில், ஹைகோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தனியார் பாலில் கலப்படம் இருப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தொடர்ந்து தெரிவித்து வருவதாகவும், ஆனால் கலப்பட பாலுக்கு எதிராக நடவடிக்கை மட்டும் எடுக்கவில்லை என்றும், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamil Nadu government to report on the action taken against adulteration milk: High Court

இந்த நிலையில் கலப்படபாலுக்கு எதிராக மாநில அரசு எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கமாக, தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஹைகோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The High Court ordered the Tamil Nadu government to report on the action taken against adulteration milk.
Please Wait while comments are loading...