எஸ்.பி. சத்யப்ரியாவின் இடைநீக்கத்தை திரும்பப் பெற தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவு
சென்னை: ஐபிஎஸ் அதிகாரியான எஸ்.பி.சத்யப்ரியாவின் இடைநீக்கம் சட்டவிரோதம். எனவே அதை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
தெற்கு சூடானுக்கு இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட அமைதி காக்கும் படையில், இணைந்து பணியாற்றுமாறு எஸ்.பி. சத்யப்ரியாவுக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து 2013ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி அவர் சூடான் சென்றார். ஆனால் அதற்கான அனுமதியை தமிழக அரசு தரவில்லை. மேலும், அவர் முறையாக விண்ணப்பிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

இதையடுத்து 2014ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி சத்யப்ரியா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து தனது பணி நீக்க உத்தரவை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் முறையிட்டார் சத்யப்ரியா. இதைத் தொடர்ந்து அக்டோபர் 28ம் தேதி மத்திய உள்துறை அமைச்சக துணைச் செயலாளர் ஜி.சி.யாதவ் தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் அபூர்வ வர்மா மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், சத்யப்ரியாவின் இடைநீக்கம் நியாயமில்லாதது, சட்டத்திற்குப் புறம்பானது. எனவே அதை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று யாதவ் அறிவுறுத்தியுள்ளார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications