அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது : சென்னையில் ஜெ.,
சென்னை: 5 ஆண்டுகால அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ அதிமுகவிற்கு மீண்டும் வாக்களியுங்கள் என்று சென்னையில் பிரச்சாரம் செய்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 16ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரம் மே 14ம் தேதி சனிக்கிழமை மாலையுடன் முடிவடைவதால் அரசியல் கட்சித்தலைவர்களின் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
கடந்த ஏப்ரல் 9ம் தேதி முதல் ஹெலிகாப்டரில் சென்று தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பிரச்சாரம் செய்து வந்த ஜெயலலிதா இம்மாதம் 6ம் தேதி தான் போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்கு சேகரித்தார். இன்றைய தினம் சென்னையில் உள்ள 15 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்தார்.

தொண்டர்கள் கூட்டம்
சென்னையில் இன்று காலை முதலே வானம் மேக மூட்டமாக இருக்க பிற்பகல் 3 மணிக்கு போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து கிளம்பிய ஜெயலலிதாவிற்கு வழி நெடுகிலும் குவிந்திருந்த தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சாலையில் விழுந்த அதிமுகவினர்
ஜெயலலிதாவின் பிரச்சார வேன் சாலையில் வருவதைப் பார்த்த அதிமுக முக்கிய நிர்வாகி ஒருவர் நடு ரோட்டிற்கு வந்தார். அப்போது ஜெயலலிதா வேனை மெதுவாக ஓட்டச் சொல்ல, நடு ரோட்டில் விழுந்து வணங்கினார் அந்த அதிமுக நிர்வாகி.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் முதலில் வாக்கு சேகரித்த ஜெயலலிதா, கடந்த 5 ஆண்டுகாலமாக நடைபெற்று வரும் அதிமுக ஆட்சி காலத்தில் வசந்தம் வீசுவதாக கூறினார். தமிழத்தில் வசந்தம் தொடர்ந்திட நூர்ஜகானுக்கு வாக்களியுங்கள் என்று கூறினார்.

அமைதிப்பூங்கா தமிழகம்
தொடர்ந்து எழும்பூர், துறைமுகம், ராயபுரம், பெரம்பூர் தொகுதிகளில் வாக்கு சேகரித்த ஜெயலலிதா, தொண்டர்கள் மத்தியில் சில நிமிடங்கள் மட்டுமே பேசினார். அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளதாக கூறிய ஜெயலலிதா, தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ அதிமுகவிற்கு மீண்டும் வாக்களியுங்கள் என்றும் ஜெயலலிதா கூறினார்.

கொளத்தூரில் திமுகவிற்கு அட்டாக்
தொடர்ந்து கொளத்தூர், விருகம்பாக்கம், அண்ணாநகர் தொகுதிகளில் வாக்கு சேகரித்தார் ஜெயலலிதா. பகல்நேரம் என்பதால் போக்குவரத்து சில இடங்களில் பாதிக்கப்பட்டது. பல தொகுதிகளில் சில நிமிடங்கள் மட்டுமே பேசிய ஜெயலலிதா, கொளத்தூர் தொகுதியில் பிரச்சாரம் செய்த போது மட்டும் 2006 - 2011ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருந்ததாக கூறினார்.

மின்வெட்டு பிரச்சினை
கருணாநிதி ஆட்சி காலத்தில் பொதுமக்களின் நிலம், சொத்துக்கள் அபகரிக்கப்பட்டதாக கூறிய ஜெயலலிதா, கடந்த 5 ஆண்டு காலம் அதிமுக ஆட்சி காலத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது என்றும் மின்வெட்டு பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது என்றார். மின்வெட்டே இல்லை என்ற நிலை நீடித்திட, ஏழைகள் ஏற்றம் பெற்றிட அதிமுகவிற்கு மீண்டும் ஆதரவு அளியுங்கள் என்று கூறி வாக்கு சேகரித்தார் ஜெயலலிதா.

வேனில் இருந்தவாரே பிரச்சாரம்
ஏழைகள் ஏற்றம் பெற்றிட புரட்சித்தலைவர் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றும் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார். ஒரே நாளில் 15 தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதால் ஒவ்வொரு தொகுதியிலும் சில நிமிடங்கள் மட்டுமே வேனில் அமர்ந்தவாரே பேசினார் ஜெயலலிதா. கடந்த 5 ஆண்டுகாலத்தில் தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என்ற வார்த்தையை செல்லும் இடங்களில் எல்லாம் கூறினார் ஜெயலலிதா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications