For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தன்மானத்தில் பின்தங்கிய தமிழகம்.. தமிழிசை கடும் தாக்கு

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    நோட்டா உடன் போட்டி போடும் பாஜக- வீடியோ

    சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில், ஆரம்பம் முதலே சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் முன்னிலை வகிக்கிறார்.

    தொடக்கம் முதலே அதிமுக 2வது இடத்தில் உள்ளது. திமுகவின் மருதுகணேஷ் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன், நோட்டாவுடன் போராடி வருகிறார்.

    பாஜக, நாம் தமிழர் மற்றும் நோட்டாவைவிட குறைவாக வாக்குகளை பெற்றுள்ளது.

    பின்தங்கியுள்ளதே

    பின்தங்கியுள்ளதே

    பாஜக பின்தங்கியுள்ளதே என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் நிருபர்கள் கேட்டபோது, தமிழகமே பின்தங்கிதான் உள்ளது. இதில் பாஜகவை மட்டும் சொல்லி என்ன பலன் என பதில் கேள்வி எழுப்பினார்.

    ஆமா, ஓட்டு ஏன் போட்டாங்க?

    ஆமா, ஓட்டு ஏன் போட்டாங்க?

    தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்தது முதலே, வாக்குகளுக்கு பணம் கொடுக்கப்படுவதாக கூறியிருந்தோம். தினகரனுக்கு வாக்கு கிடைக்க என்ன காரணம்?

    தமிழகத்திற்கு உழைத்தாரா, பாடுபட்டாரா? அவருக்கு ஓட்டுகிடைக்கும்போதே தெரியவில்லையா, இது எதற்காக கிடைத்த வாக்கு என்பது?

    தன்மானத்தில் பின்னடைவு

    தன்மானத்தில் பின்னடைவு

    நடந்தது ஒரு தேர்தலே கிடையாது எனும்போது, பணம் தராமல் நேர்மையாக தேர்தலை சந்தித்த பாஜகவுக்கு பின்னடைவா என கேட்பதே தவறு. உண்மையை சொன்னால், தமிழகம் தன்மானத்தில் பின்னடைந்துள்ளது. இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.

    வாக்கு விற்பனை

    வாக்கு விற்பனை

    வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோதே தமிழிசை வெளியிட்ட டிவிட்டில், வாக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது உறுதியாக தெரிகிறது என தமிழிசை தெரிவித்திருந்தார்.

    English summary
    When the reporters asked the Tamil Nadu BJP leader Tamilnadu Soundararajan that the BJP is behind in RK Nagar, she said, Tamil Nadu itself is backward. The question of the BJP doesn't raised, she said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X