கர்நாடகவின் நந்தினி பாலை விற்க மாட்டோம்- தமிழக பால் வியாபாரிகள் அதிரடி
சென்னை: தமிழகத்தில் விற்பனை செய்ய கொண்டு வரப்படும் கர்நாடக அரசின் "நந்தினி" பால் மற்றும் பால் பொருட்களை நாளை (13.09.2016) முதல் பால் முகவர்கள் எவரும் கொள்முதல் செய்யாமல் கர்நாடகாவிற்கே திருப்பி அனுப்பி அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக பால் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க மாநிலத்தலைவர் பொன்னுச்சாமி விடுத்துள்ள அறிக்கை :
நமது தமிழக விவசாயிகளுக்கு காவேரி நீரை திறந்து விட மறுத்து கர்நாடக அரசும், கர்நாடக அரசியல்வாதிகளும், கன்னட வெறியர்களும் துரோகம் இழைத்து வருவதோடு, தொடர்ந்து பல இடையூறுகளை செய்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் கர்நாடகாவில் வசித்து வருகின்ற தமிழர்களுக்கு பல இன்னல்களையும் தொடர்ந்து கொடுத்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் காவேரி தொடர்பாக தமிழகத்திற்கு ஆதரவாக முகநூலில் பதிவிட்ட கர்நாடக வாழ் தமிழரை 10க்கும் மேற்பட்ட கன்னட வெறியர்கள் சூழ்ந்து கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். தமிழர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அந்த மனித மிருகங்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க முன் வராமல் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் கர்நாடக அரசையும், கர்நாடக காவல்துறையையும், கன்னட வெறியர்களையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
மேலும் தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் கர்நாடக அரசை கண்டிக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இன்னும் தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே நடத்தி வரும் மத்திய அரசையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
பல ஆண்டுகளாக காவேரி விவகாரத்தில் தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து, தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து வரும் கர்நாடக அரசிற்கும், கர்நாடக வாழ் தமிழர்களை தொடர்ந்து தாக்கி வரும் கன்னட வெறியர்களுக்கும் நமது எதிர்ப்பை தெரிவிக்கின்ற வகையில் தமிழகத்தில் விற்பனை செய்ய கொண்டு வரப்படும் கர்நாடக அரசின் "நந்தினி" பால் மற்றும் பால் பொருட்களை நாளை (13.09.2016) முதல் பால் முகவர்கள் எவரும் கொள்முதல் செய்யாமல் கர்நாடகாவிற்கே திருப்பி அனுப்பி அனைவரும் புறக்கணிக்க வேண்டுகிறோம்.
மேலும் தமிழகத்திற்கு காவேரியை நிரந்தரமாக திறந்து விடும் வரை கர்நாடகாவில் இருந்து வரும் எந்த ஒரு பால் நிறுவனங்களின் பால் மற்றும் பால் பொருட்களை பால் முகவர்கள் அனைவரும் கொள்முதல் செய்யாமல் புறக்கணித்து தமிழக அரசின் ஆவின் மற்றும் தமிழகத்தின் தனியார் பால் நிறுவனங்களின் பால் மற்றும் பால் பொருட்களை மட்டுமே கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு தங்குதடையற்ற சேவையை வழங்கிட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம் என்று பொன்னுச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
நம்ம ஊரில் உள்ள ஆவின் போல கர்நாடகத்தில் விற்பனை செய்யப்படுவது நந்தினி பால் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications