காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் இரவு நேர மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இரவு நேரங்களில் மழை பெய்யும் என்றும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். மேற்கு மத்திய வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று காலையில் இருந்து பகல் 1 மணி வரை சுள் என்று வெயில் நன்றாக அடித்தது. மாலை 4 மணிக்கு மேல் வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. திடீர் என்று மாலை 5 மணி முதல் அரைமணிநேரம் எழும்பூர், புரசைவாக்கம் ஆகிய இடங்களில் மழை பெய்தது.

சிறிது நேரம் பெய்த பலத்த மழையின் காரணமாக ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதனால் மழை பெய்த பகுதிகளில் வெப்பம் சற்று தணிந்து காணப்பட்டது.
நள்ளிரவில் சென்னையின் நகரப்பகுதிகளிலும், தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும் பலத்த மழை கொட்டியது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் பெய்துள்ளதாக வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,
மேற்கு மத்திய வங்கக் கடலில், ஆந்திர கடலோரப் பகுதியில், அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
இது உருவான பின்னரே அதன் நகர்வைப் பொருத்து, அந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்துக்கான மழை வாய்ப்புகள் குறித்து தெரியவரும்.
இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும என்றும் கூறினார்.
தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவமழை பெய்து வருகிறது. நேற்று வரை தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவமழை இயல்பாக பெய்துள்ளது. குறைவாகவோ, கூடுதலாகவோ பெய்யவில்லை. அடுத்த 24 மணிநேரத்தில் ஆந்திரா அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது.
தமிழ்நாட்டில் வட மாவட்டங்களில் 11ம் தேதி சில இடங்களில் மழை பெய்யும், 12ம் தேதி அனேக இடங்களில் மழை பெய்யும். இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திராவில் தான் அதிக மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
இதனிடையே சமூகவலைத்தளத்தில் மழை எச்சரிக்கை விடுக்கும் தமிழ்நாடு வெதர்மேனும் மழை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications