தாராபுரம் பஸ் நிலையத்தில் ஒரு தகராறு... பயணியின் மூக்கைக் கடித்த டிரைவர்!
கோவை: தாராபுரம் பஸ் நிலையத்தில் ஏற்பட்ட தகராறில் அரசுப் பேருந்தில் பயணித்த பயணியின் மூக்கைக் கடித்து விட்டார் டிரைவர். படுகாயமடைந்த பயணியை மருத்துவமனையில் சேர்த்து தையல் போட்டனர்.
பிப்ரவரி 5ம் தேதி தாராபுரத்திற்கு அரசுப் பேருந்து ஒன்று வந்துள்ளது. பஸ் நிலையத்தில் பஸ் நின்றதும் பயணிகள் கீழே இறங்கினர். அப்போது பஸ் டிரைவர் செல்வராஜும், சசிக்குமார் என்ற கார் மெக்கானிக் ஷாப் உரிமையாளரும் படிக்கட்டில் இறங்கியபோது இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.

இருவரும் கடுமையாக வாதம் புரிந்தனர். இது பின்னர் கைகலப்பாக மாறியது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் பிரித்து விட்டனர். இந்த சமயத்தில் திடீரென செல்வராஜ், சசிக்குமார் மீ்து பாய்ந்து அவரது மூக்கை பலமாக கடித்தார். இதனால் ரத்தம் கொட்டியது. வலியால் அலறித் துடித்தார் சசிக்குமார்.
உடனடியாக அவரை தாராபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தையல் போடப்பட்டது. அவர் கொடுத்த புகாரின் பேரில் செல்வராஜ் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications