என்ன ஒரு தந்திரம்.. நீட் வேண்டாம் என்ற தமிழக மக்களை இங்கேயே நடத்துங்கள் என கேட்க வைத்த மத்திய அரசு!
நேற்று வரை நீட் வேண்டாம் என்றவர்கள் இன்று தேர்வு மையங்களை இங்கேயே அமையுங்கள் என போராட ஆரம்பித்துவிட்டனர்.
Recommended Video

சென்னை: நேற்று வரை நீட் வேண்டாம் என்றவர்களை இன்று தேர்வு மையங்களை இங்கேயே அமையுங்கள் என போராட ஆரம்பித்துவிட்டனர்.
நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான நீட் தேர்வு வரும் 6ஆம் தேதி நடைபெறுகிறது.
நீட் தேர்வு மையங்கள் தமிழகத்தில் போதுமான அளவு ஒதுக்கப்படாததால் வெளி மாநிலங்களில் கூடுதல் மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் ஏப்ரல் 27-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், "நீட் தேர்வு மையங்களை மாணவர்கள் வசிப்பிடம் அருகே ஒதுக்கவேண்டும். முடியாதபட்சத்தில் தமிழகத்துக்குள் தேர்வுமையங்களை ஒதுக்கவேண்டும்.

மையங்களை மாற்ற முடியாது
இது தொடர்பாக சிபிஎஸ்இ தனது இணையதளத்தில் அல்லது நாளேடுகளில் உடனடியாக அறிவிப்பு வெளியிடவேண்டும்," என்று தெரிவித்திருந்தது. இதை எதிர்த்து சிபிஎஸ்சி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. நீட் தேர்வு நடைபெற குறைந்த கால அவகாசமே உள்ளதால் தேர்வு மையங்களை திடீரென மாற்ற முடியாது என சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உச்சநீதிமன்றம் அதிரடி
இதனை ஏற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குத் தடை விதித்தனர். தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நீட் தேர்வு மையங்களை மாற்றினால் மாணவர்கள் குழப்பமடைவர் என்பதால் அவற்றை மாற்ற தேவையில்லை என்று கூறினர்.

மாணவர்கள் அவதி
தமிழகத்தில் வெறும் 10 மையங்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான மாணவர்கள் இந்த ஆண்டு வெளி மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் நீட் தேர்வை எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் மாணவர்கள் மட்டுமின்றி அவர்களின் பெற்றோர்களும் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இன்று இங்கே அமையுங்கள்
தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம் என நேற்று வரை போராடிய மக்கள் இன்று தேர்வு மையங்களை இங்கேயே அமைத்து கொடுங்கள் என போராட வைத்து விட்டது மத்திய அரசு. அரசியல் கட்சிகளும் கூட நீட் தேர்வு மையங்களை தமிழகத்திலேயே வையுங்கள் என்று பேச வைத்துவிட்டனர்.

உளவியல் பாதிப்பு
தமிழக மாணவர்கள் சொந்த மாநிலத்தில் நீட் தேர்வு மையங்களை அமையுங்கள் என கெஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களுக்காக தெரியாத வெளி மாநிலங்களில் மாணவர்கள் தேடி அலையும் போது மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு சரியாக தேர்வு எழுத முதடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

தந்திர செயல்
மத்திய அரசின் தந்திரமான செயலா இது என்ற கேள்வியும் எழுகிறது. மக்களை மனதளவில் நீட் தேர்வுக்கு ஆதரவாக திருப்பும் முயற்சியா இது என்றும் மருத்துவ படிப்பில் தமிழக மாணவர்களை ஒதுக்க நடக்கும் சதியா என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications