பள்ளிகள் திறக்கும் போதே பாடப்புத்தகம்! தாமதம் என்ற பேச்சுக்கே இடமில்லை! லியோனி திட்டவட்டம்!
சென்னை: பள்ளிகள் திறக்கும் போதே மாணவர்களுக்கு பாடப்புத்தகம் விநியோகம் செய்யப்படும் என்றும் தாமதம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லியோனி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டுகளில் பள்ளிகள் திறக்கப்பட்டு சில நாட்களுக்கு பிறகே புத்தகங்கள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்தாண்டு முன்கூட்டியே எல்லா ஏற்பாடுகளும் பக்காவாக செய்யப்பட்டுள்ளன.

ஜூன் 1ஆம் தேதி திறக்கப்படவிருந்த பள்ளிகள் கோடை வெயில் காரணமாக ஜூன் 7ஆம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில் மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஜூன் 7ஆம் தேதியன்று 2023-2024 கல்வியாண்டுக்கான புத்தகங்களை மாணவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குவார் என்ற தகவலையும் திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார்.
தற்போது முழுக்க முழுக்க இந்தப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் திண்டுக்கல் லியோனி, கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி மாவட்டத்தின் கடைக்கோடி கிராமம் வரை பள்ளிகள் திறக்கப்படும் நாளில் புத்தகம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அமைச்சர் அன்பில் மகேஷும் இது தொடர்பான ஆலோசனைகளை தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனிக்கு வழங்கி வருகிறார்.
இதனால் மாணவர்களே, பெற்றோர்களே புத்தகம் விரைவாக கிடைக்குமா என்ற ஐயத்தை விட்டுவிட்டு புதிய கல்வியாண்டை மகிழ்ச்சியாக எதிர்கொள்ள ஆயத்தமாகுங்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications