கட்டிப்பிடித்தார்.. ஆபாச படங்களை காண்பித்தார்.. ஐஜி மீது பெண் எஸ்பி புகார்.. திடுக் தகவல்கள்!
லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி தனது அறையில்வைத்து ஆபாச படங்களை காட்டியதாக பெண் எஸ்பி அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி தனது அறையில்வைத்து ஆபாச படங்களை காட்டியதாக பெண் எஸ்பி அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றி வரும் பெண் எஸ்பி அத்துறையின் ஐஜி மீது பாலியல் புகாரை அளித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக டிஜிபி மற்றும் தலைமை செயலாளருக்கு அந்த பெண் எஸ்பி புகார் கடிதத்தையும் அனுப்பியுள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருக்கும் தகவல்கள் பரபரப்பை கிளப்பியுள்ளன. அதாவது, தான் லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியில் சேர்ந்தது முதலே ஐ.ஜி தன்னிடம் தவறான நோக்கத்திலேயே நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

கட்டிப்பிடித்தார்
சில சமயங்களில் ஆலோசனை என அழைத்து அவருடையை அறையில் வைத்து தன்னை கட்டிப்பிடித்து தவறாக நடக்க முயற்சி செய்ததாகவும் அந்த பெண் எஸ்பி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

ஆபாச எஸ்எம்எஸ்கள்
பலமுறை நான் தவிர்த்தும் தன்னை மிரட்டி தனக்கு ஐஜி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக அவர் கூறியுள்ளார். வேலை நேரத்தில் தனக்கு ஆபாசமான எஸ்.எம்.எஸ்கள் அனுப்புவது, ஆபாச படங்கள் அனுப்புவது என ஐஜியின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் பெண் எஸ்பி தெரிவித்துள்ளார்.

ஆபாச படங்கள்
பல முறை அவருடைய அறையில் வைத்து ஆபாச படங்களை காட்டி பாலியல் ரீதியாக தன்னிடம் தவறாக நடக்க முயன்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த 7 மாதங்களாக அவர் இதுபோன்று தனக்கு தொல்லை கொடுத்து வருவதாகவும் பெண் எஸ்பி தெரிவித்துள்ளார்.

நாசமாக்கி விடுவேன்
இது குறித்து வெளியில் கூறினாலோ அல்லது புகார் அளித்தாலோ ஆண்டுதோறும் வழங்கப்படும் நன்னடத்தை அறிக்கையில் மோசமான வார்த்தைகளை சேர்த்து எதிர்காலத்தை நாசமாக்கிவிடுவேன் என அந்த அதிகாரி மிரட்டியதாகவும் பெண் எஸ்.பி தெரிவித்துள்ளார்.

விசாரணைக்குழு அமைப்பு
இந்த புகார் கடிதம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து ஐஜி மீதான புகாரை விசாரிக்க டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார். ஏ.டி.ஜி.பிக்கள் சீமா அகர்வால், சு.அருணாச்சலம் மற்றும் டி.ஐ.ஜி தேன்மொழி ஆகியோர் அடங்கிய குழுவை டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் அமைத்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications