சென்னையில் ஆந்திரா பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன! கண்ணாடிகள் உடைந்து சிதறின!!
சென்னை: 20 தமிழரை படுகொலை செய்த ஆந்திரா அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அம்மாநில அரசு பேருந்துகள் சென்னையில் அடித்து நொறுக்கப்பட்டன.

திருப்பதி அருகே வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தியதாக 20 தமிழர்களை ஆந்திரா போலீசார் சுட்டுப் படுகொலை செய்தனர். இச்சம்பவம் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் தமிழகத்தில் பல இடங்களில் ஆந்திரா அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை அருகே பூவிருந்தவல்லியில் ஆந்திரா பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. தமிழர் முன்னேற்றப் படையினர் நடத்திய இத் தாக்குதலில் ஆந்திரா மாநில அரசின் பேருந்து கண்ணாடிகள் உடைந்தன.

இதேபோல் சென்னை கோயம்பேட்டிலும் ஆந்திரா பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலை நடத்தியதாக தமிழக முன்னேற்றக் கழகத்தினர் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications