எம்.ஜி.ஆர் குல தெய்வம் என்ன தெரியுமா? ஆன்மீக இணையதளத்தில் சுவாரஸ்ய கட்டுரை
சென்னை: ஆன்மீகம், ஜோதிடம் தொடர்பான கட்டுரைகள், ஆலய தரிசனங்களை படிப்பவர்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது. ஆன்மீக செய்திகளை விரும்பும் வாசகர்களுக்காகவே இணைய தளத்தில் புதிதாக சக்தி ஆன்லைன் தொடங்கப்பட்டுள்ளது.
பிரபல தொலைக்காட்சிகளில் செய்தி பிரிவில் இருந்த பார்த்திபன் என்பவர் இந்த இணைய தளத்தை தொடங்கியுள்ளார். இந்த இணைய தளத்தில் சென்னையில் உள்ள பிரபல கோவில்கள் பற்றியும் சித்தர்கள், ஆன்மீக கட்டுரைகள் பலவும் அழகாக தொகுக்கப்பட்டுள்ளன. உலகில் உள்ள மிகப்பெரிய ஆலயங்கள் பற்றிய தொடரும் எழுதப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் பிரபல ஊடகவியலாளர்கள் எழுதி வருகின்றனர். ஏழுமலை வெங்கடேசன் என்பவர் எம்.ஜி.ஆரின் குல தெய்வம் பற்றி எழுதிய கட்டுரையில் பல சுவாரஸ்ய தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் கடவுள் பக்தி நிறைந்தவர் என்றும், திருப்பதிக்கு சென்று தரிசனம் செய்துள்ளார் என்றும் ஒரு கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது. கோயில்களுக்கு போவேனே தவிர, அது வேண்டும் இது வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்வதெல்லாம் கிடையாது. வேண்டுவதுகூட தப்பில்லை. நமக்கு நேரும் கஷ்டங்களுக்கு கடவுளை குறை சொல்வதுதான் எனக்கு பிடிப்பதில்லை என்பது எம்.ஜி.ஆரின் கருத்தாகும்.
காளி எங்கள் குல தெய்வம். காளியையும் விஷ்ணுவையும் தவறாமல் வணங்கி வந்தார் என் தாய். திருப்பதி வெங்கடாஜலபதி மேல் அவருக்கு ரொம்ப பக்தி என்று தன் குடும்பத்து இஷ்ட தெய்வங்களை பட்டியலிட்டுள்ளார்.
ஜோதிடம் இல்லாத ஆன்மீக தளமா? ஜோதிடம், ராசிபலன், வாரபலன்களும் இந்த இணைய தள பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. பிரபல ஆன்மீக உபாசகர்களின் உரையும் வீடியோ வடிவில் இடம் பெற்றுள்ளது இந்த http://www.shakthionline.com/ இணைய தளத்தின் சிறப்பம்சமாகும்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications