தமிழறிஞர் மணவை முஸ்தபா காலமானார்

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தமிழறிஞர் மணவை முஸ்தபா காலமானார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள் உள்பட ஏராளமான நூல்களை இயற்றிய தமிழறிஞர் மணவை முஸ்தபா காலமானார். அவருக்கு வயது 82.

மணவை முஸ்தபா 1935 ஆம் ஆண்டு ஜூன் 15ம் தேதி பிறந்தவர். அறிவியல் தமிழ் வளர்ச்சி தொடர்பான பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வந்தவர் மணவை முஸ்தபா.

Tamil scholar manavai mustafa passes away

இவர் எழுதிய "இசுலாமும் சமய நல்லிணக்கமும் " எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 1996 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் தத்துவம், சமயம்,

அளவியல், அறவியல் எனும் வகைப்பாட்டில் இரண்டாம் பரிசும், இவர் எழுதிய மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்" எனும் நூல் 1996 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறப்பு வெளியீடுகள் எனும் வகைப்பாட்டில் முதல் பரிசும் பெற்றிருக்கின்றன.

தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள் உள்பட ஏராளமான நூல்களை இயற்றியிருக்கிறார். அறிவியல் தமிழ் அறக்கட்டளை என்னும் நிறுவனத்தையும் இவர் நிறுவி உள்ளார். அதன் மூலம் இணைய நூலகமும் தற்போது இயங்கி வருகிறது. பல்வேறு தமிழ் வளர்ச்சிக்காக தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். 40க்கும் மேற்பட்ட பட்டங்களும், விருதுகளும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மணவை முஸ்தபா அவரது அண்ணாநகர் இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 82.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+