அதிவேகமாக பஸ் ஓட்டிய டிரைவரை தட்டிக் கேட்ட பிரபல தமிழ் டிவி சேனல் நிருபர் மீது சரமாரி தாக்குதல்
திருப்பத்தூர்: திருப்பத்தூரில் தனியார் தொலைக்காட்சி ஊழியரை தாக்கிய பேருந்தை சாலை மறியலில் ஈடுபட்டு சிறைபிடித்த பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாக ஊர் பொதுமக்கள் சேர்ந்து போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் பிரபல தனியார் செய்தி தொலைக்காட்சியில் செய்தியாளராக பணிபுரிந்து வருபவர் நைனா முகமது. இவர் இன்று காரையூரில் அமைச்சர் பங்கேற்கும் கிராம சபை கூட்டத்திற்கு செய்தி சேகரிக்க இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து ஓட்டுனரிடம் ஏன் இவ்வளவு வேகமாக நகரத்திற்குள் வருகிறீர்கள் என கேள்வி கேட்டதற்கு, "நாங்கள் அப்படித்தான் வருவோம் உன்னால் முடிந்ததை செய்து கொள்" என தகராறு செய்தனராம்.
பின்னர் தனியார் பேருந்து ஓட்டுனர் மற்றும் அருகில் இருந்த சிலர், செய்தியாளரை கடுமையாக தாக்கினர். இதில் அதிர்ச்சி அடைந்த செய்தியாளர் அருகில் இருந்த திருப்பத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் பேருந்து மதுரையை நோக்கி சென்று விட்ட காரணத்தினால் திரும்பி வரும்போது ஓட்டுனரையும், செய்தியாளரை தாக்கிய நபரையும் காவல் நிலையத்தில் ஒப்படைப்பதற்காக காத்திருந்த பத்திரிகையாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
மாற்று ஓட்டுநரை வைத்து பேருந்து இயக்கி வந்ததால் ஆத்திரமடைந்த பத்திரிகையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு பேருந்தை சிறை பிடித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தற்சமயம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் பத்திரிகையாளர்கள் செய்தியாளரை தாக்கிய நபரையும் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட நபரையும் ஒப்படைக்க வலியுறுத்தி தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications