தேர்தலில் மட்டுமல்ல இனி போராட்டம் கூட தனித்துதான்: தமிழருவி மணியன் அறிவிப்பு
சென்னை: இடதுசாரி இயக்கம் முன்னின்று உருவாக்கிய மக்கள் நலன் சார்ந்து போராடுவதற்காக அமைக்கபட்ட கூட்டணியில் காந்திய மக்கள் இயக்கம் தொடர்ந்து அங்கம் வகிக்க விரும்பவில்லை என்று அக்கட்சியின் நிறுவனர் தமிழருவி மணியன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சட்டப்பேரவைத் தேர்தல் வருவதற்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் ஆட்சியாளர்களின் தவறுகளைக் கண்டித்துப் போராடுவதற்கு உருவாக்கப்பட்ட இந்த மக்கள் கூட்டணி தேர்தல் கூட்டணியாக மற்றம் அடைவதுதான் இயல்பானது. ஆனால், மக்கள் கூட்டணிக்கும் தேர்தல் கூட்டணிக்கும் சம்மந்தமில்லை என்று சொல்வது சில சந்தேகங்களுக்கு இடமளிக்கிறது.
மக்கள் கூட்டணியில் இன்று இடம் பெற்றுள்ள கட்சிகள் நாளை தி.மு.க.வோடு சேர்ந்து நின்று தேர்தலைச் சந்திப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இரண்டு திராவிடக் கட்சிகளின் பிடியிலிருந்து தமிழகம் விடுபடவேண்டும் என்பதே காந்திய மக்கள் இயக்கத்தின் விருப்பமாகும்.
தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., ஆகியவற்றுடன் எந்த நிலையிலும் வரவிருக்கும் தேர்தலில் சேர்ந்து நிற்க மாட்டோம் என்று மக்கள் கூட்டணியில் இடம் பெற்றிருப்பவர்கள் வெளிப்படையாக வாக்குமூலம் வழங்கினால் மட்டுமே அவர்கள் நடத்தவிருக்கும் போராட்டங்களில் காந்திய மக்கள் இயக்கம் பங்கேற்கும்.
தேர்தல் வரும்வரை இரண்டு திராவிடக் கட்சிகளை எதிர்ப்பதும், தேர்தல் நேரத்தில் இரண்டில் ஒன்றுடன் அணி சேர்வதும் தமிழகத்தில் உள்ள கட்சிகளின் வழக்கமாக ஆகிவிட்டது. காந்திய மக்கள் இயக்கம் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனியாகவே களம் காணவிருப்பதால் எக்கட்சிகளுடனும் கைகோர்த்து நிற்கும் நிலையில் இல்லை.
காந்திய மக்கள் இயக்கம் வேட்ப்பாளர்களை நிறுத்தாத தொகுதிகளில் மட்டும் இடதுசாரிகளையும் மற்றும் தகுதி மிக்க வேட்பாளர்களையும் ஆதரிக்கும். மதுவிலக்கு முதல் அனைத்து போராட்டங்களையும் இந்த அரசுக்கு எதிராக சட்டதிற்குட்பட்டு காந்திய மக்கள் இயக்கம் தனியாகவே நடத்தும் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications