For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மெர்சலுக்கு ஒரு நியாயம், 'அடல்ஸ் ஒன்லி' படங்களுக்கு வேறு நியாயம் கிடையாது: தமிழிசை

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை: மெர்சல் படத்தில் இடம் பெற்ற காட்சிகள் கருத்து சுதந்திரமாகாது என்று பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

    மெர்சல் திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய கோரி அஸ்வத்தாமன் என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கோரியிருந்தார்.

    Tamilisai disappointed over Mersal issue

    மனு மீதான விசாரணைக்கு பிறகு, மனுவை ஹைகோர்ட் இன்று தள்ளுபடி செய்துவிட்டது. கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உள்ளது என்றும், பார்க்க விருப்பம் இல்லாதவர்கள் படத்தை பார்க்க வேண்டாம் என்றும் ஹைகோர்ட் கூறியுள்ளது.

    இதுகுறித்து தமிழிசை சவுந்தரராஜன் டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி:எதிராக கருத்து சொன்ன செய்தி தாள் அலுவலகங்களை எரித்த சம்பவம் இதே தமிழகத்தில் நடந்தது. பல படங்களை வெளியிடவிடாமலேயே தடுத்த சம்பவம் நடந்தது. ஆனால் நாங்களோ உண்மைக்கு மாறான காட்சிகளை மட்டுமே நீக்க கோரினோம்.

    மக்களுக்கு சினிமாவை பிரித்து பார்க்க தெரியாது. குழந்தைகள் அடல்ஸ் ஒன்லி படம் பார்க்க வேண்டாம் என்று சொல்கிறோமே, எதற்காக? மக்களின் மனங்களை திரைப்படம் பாதிக்கும் என்பதற்காகவே அப்படி சொல்கிறோம். தணிக்கை துறையினர், கோட்டை விட்டு விட்டார்கள் என்பதற்காக அதே காட்சிகளை ஏற்க முடியாது.

    இருப்பினும் நீதிமன்ற தீர்ப்பை விமர்சனம் செய்ய கூடாது. இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.

    English summary
    Tamilisai disappointed over Mersal issue, as High court dismissed plea against the film.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X