ராமதாஸ் குறித்து அவதூறாக எதையும் பேசவில்லை: தமிழிசை விளக்கம்
ராமதாஸ் குறித்து அவதூறாக தான் எதையும் பேசவில்லை என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: மன்னிப்பு கேட்கும் அளவுக்கு ராமதாஸ் குறித்து அவதூறாக தான் எதையும் பேசவில்லை என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
தொலைகாட்சி நிகழ்ச்சியில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் குறித்து ராமதாஸ் மீது தமிழிசை கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் சென்னை பாஜக தலைமை அலுவலகத்துக்கு வந்ததால் மோதல் ஏற்பட்டது.
இதுகுறித்து தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில் புத்திசாலித்தனம் இல்லாத மாதிரி பதிவுகளை அன்புமணி போட்டு வருகிறார். 20 ஆண்டுகால கடினமான உழைப்புக்கு அறிவாற்றல், தேசிய பண்பு இருப்பதால்தான் ஒரு கட்சியின் தலைவராகியுள்ளேன்.

சுயஉழைப்பு
தகுதியில்லாமல் நான் அரசியல் கட்சியின் தலைவராக வரவில்லை. நான் அரசியல் கட்சி தலைவரின் மகள்தான். ஆனால் அந்த நிழலில் நான் நிச்சயமாக தலைவராகவில்லை. எனது சுயஉழைப்பினால் தலைவராகியுள்ளேன்.

பதில் பதிவு செய்யுங்கள்
என்னை பற்றி பேச அன்புமணிக்கு தகுதியில்லை. இவர்கள் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரயில் நிலையம் அவர்கள் பகுதிக்கு வரவில்லை. அதுபோல் அன்புமணி சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வரவில்லை. இது வரலாற்று உண்மை. இதை மறுக்க முடியாது. நீங்கள் என்ன முயற்சி செய்தீர்கள் என்பதை பதிவு செய்யுங்கள்.

அமைச்சராகிவிட்டேன் என்கிறார்
அதவிட்டுவிட்டு உங்களுக்கெல்லாம் தலைவராகும் தகுதி இருக்கிறதா. நீங்கள் பார்வையாளராக இருக்கும் போதே நான் அமைச்சராகிவிட்டேன் என்கிறார். இவரெல்லாம் எத்தனை பேரை காவு வாங்கிவிட்டு அமைச்சர் ஆனார் என்பது எங்களுக்கெல்லாம் தெரியாதா என்ன. சுகாதாரத் துறைக்கு தகுதியானவர்கள் பலர் இருந்து ராமதாஸின் மகன் என்பதால் மட்டுமே அமைச்சராகியுள்ளீர்கள்.

அன்புமணியுடன் விவாதம்
ராமதாஸ் என்ன சொல்லியிருந்தார். எங்கள் வீட்டிலிருந்து யாராவது அமைச்சராகவோ சட்டமன்ற உறுப்பினராகவோ ஆகினால் என்னை சவுக்கால் அடியுங்கள் என்றார். இப்போது என்ன செய்வது. அன்புமணியுடன் நான் விவாதிக்க தயாராக உள்ளேன்.

பேசலாமா
நான் என்ன தவறு செய்தேன், மன்னிப்பு கேட்பதற்கு? மரம் வெட்டுவது குறித்து ராமதாஸ் பேசுகிறாரே என்று டிவி பேட்டியில் என்னிடம் கேட்டனர். அதற்கு மரம் வெட்டுவது பற்றியெல்லாம் இவர்கள் பேசலாமா என்று மட்டும்தான் கேட்டேன் என்றார் தமிழிசை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications