கார் விபத்தில் சிக்கிய பாஜக மாநில பொதுச்செயலாளர்... நேரில் சென்று தமிழிசை, இல.கணேசன் ஆறுதல்
திருச்சி: விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாஜக மாநில பொதுச்செயலாளர் மோகன்ராஜுலுவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே நேற்று புழுதிப்பட்டியில், பாஜக மாநில பொதுச்செயலாளர் மோகன்ராஜூலுவின் கார் மீது லாரி ஒன்று மோதியது. இதில், பலத்த காயமடைந்த மோகன்ராஜூலு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள காவேரி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிப்பட்டுள்ளார்.

அவரோடு காரில் வந்த துணைதலைவர் சுரேந்திரன், பாதுகாப்பு அலுவலர் பாண்டியன் டிரைவர் விவேக் ஆகியோரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கே நேரில் சென்று மாநில தலைவர் தமிழிசை ஆறுதல் கூறினர். அப்போது பாஜக மூத்த தலைவர் இல.கணேசனும் உடனிருந்தார்.
விபத்தில் காயமடைந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து அவர்களுக்கு தமிழிசை ஆறுதல் தெரிவித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேர்தல் பிரச்சாரத்திற்காகச் சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திருநாரையூர் என்ற இடத்தில் சாலை விபத்தில் சிக்கிய பாமக ஆதரவாளரையும், அவரது மனைவியையும் காப்பாற்றி தனது வாகனத்திலேயே கொண்டு சென்று ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தது நினைவு கூரத்தக்கது.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications