ஆம்புலன்சில் பணம் கடத்துவது வேதனை அளிக்கிறது: தமிழிசை சவுந்தரராஜன்
சென்னை: விபத்தில் சிக்கிய காயமடைந்தவர்களின் உயிரைக்காக்க பயன்படும் ஆம்புலன்ஸ் வாகனங்களில் பணத்தைக் கடத்துவது வேதனை அளிக்கிறது என்று மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை கமாலாலயத்தில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசிய அவர், பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை கண்டிப்பாக மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது குறிப்பாக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனிடம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றார்.

100 கூட்டங்கள் நடத்தி மக்களை சந்தித்து மக்களுக்காக தயாரித்த தேர்தல் அறிக்கை இது. இளங்கோவன் எங்கள் தேர்தல் அறிக்கையை விஷ வித்துக்கள், சமூக நீதி பாதுகாப்பு இல்லாத அறிக்கை என்று கூறி இருக்கிறார்.
காங்கிரசுக்கு எங்களுடைய தேர்தல் அறிக்கை சவாலாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் ஏற்கனவே ஏழை, இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்று கூறி இருக்கிறோம். சிறுபான்மை மாணவர்களுக்கு கொடுப்பது போல் ஏழை இந்து மாணவர்களுக்கும் கொடுக்க வேண்டும்.
கரூரில் கட்டு கட்டாக பணம் சிக்கியது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. ஏன்னென்றால் அந்த பணத்தை ஆம்புலன்சில் எடுத்து சென்றது வருத்தம் அளிக்கிறது. ஆம்புலன்ஸ் உயிரை காப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. அதில் பணத்தை கடத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது ஜனநாயக படுகொலை. இனி ஒவ்வொரு ஆம்புலன்ஸ் வாகனத்தையும் நிறுத்தி சந்தேகப்பட்டு சோதனையிட வேண்டிய நிலை ஏற்படும்.
சிறு வியாபாரிகள் எடுத்து செல்லும் பணத்தை தேர்தல் கமிஷன் பறிமுதல் செய்கிறது. ஆனால் கட்டு கட்டாக பணம் கொண்டு செல்லப்பட்டபோது ஏன் கைப்பற்றப்படவில்லை என்ற கேள்வி எழும்புகிறது.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி குறிப்பாக காங்கிரஸ் கட்சியினரிடமும் பணம் கைப்பற்றி இருப்பது கவலைப்பட வேண்டிய விஷயம்.
மக்களை காக்க வேண்டிய காவல்துறையினரே ஆளுங்கட்சிக்கு காவல் காப்பது இன்னும் வேதனையாக இருக்கிறது. உயர் அதிகாரிகள் இடமாற்றங்கள் செய்யப்பட்டது அரசாங்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டது வெளிப்படையாக தெரிகிறது.
தேர்தல் ஆணையம் 100 சதவீத வாக்குப்பதிவு இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவது சரியானது தான். ஆனால் தவறான வாக்குப்பதிவு செய்ய விட கூடாது என்று தமிழிசை சவுந்தராஜன் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications