யாரு பயந்தாங்கொள்ளி பிரதமரா?.. அப்ப கள்ளத்தோணியில் இலங்கை சென்றதற்கு என்ன பெயர்!- தமிழிசை கேள்வி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மோடியைத் தாக்கும் வைகோ-வீடியோ

  சென்னை: பிரதமரின் ஹெலிகாப்டர் பயணம் குறித்து குறைகூறும் வைகோ, யாருக்கு பயந்து கள்ளத்தோணியில் இலங்கை சென்றார் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.

  சென்னையில் தளவாட பொருட்கள் கண்காட்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வருகிறார். காவிரி வாரியம் அமைக்காத பிரதமர் தமிழகத்துக்கு வரக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

  Tamilisai Soundararajan asks Vaiko about his illegal travel to Srilanka

  இந்நிலையில் இதுகுறித்து வைகோ கூறுகையில் வீராதி வீரர், தீரர் மோடி தமிழக சாலைகளில் பயணிக்க தைரியம் இல்லாதவர். சாலையில் போகாமல் மகாபலிபுரத்திற்கும் ஐஐடிக்கும் ஹெலிகாப்டரில் போகிறார். உங்களை மாதிரி பயந்தாங்கொள்ளி பிரதமரை இதுவரை நாங்கள் பார்த்ததே இல்லை.

  நாங்க என்ன கறுப்பு கொடியை வச்சு சுடவா போறோம். கறுப்புக் கொடிக்கே பயப்படலாமா. தைரியம் இருந்தால் சாலையில் பயணித்து பாருங்கள் என்று மோடிக்கு சவால் விடுத்தார் வைகோ.

  இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் தமிழிசை தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், பிரதமரின் ஹெலிகாப்டர் பயணம் வழக்கமான ஒன்றே, அதை கோழை, பயந்தாங்கொள்ளி என கீழ்த்தரமாக விமர்சித்த வைகோ அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்,இதை சொல்லும் திரு.வைகோ யாருக்கு பயந்து கள்ளதோணியில் இலங்கை சென்றார்? பிரதமர் முன்அறிவிப்பு இல்லாமல் தீவிரவாத நாடான பாகிஸ்தானுக்கே தைரியமாக சென்றவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Tamilisai tweets that Vaiko’s comments on Hon’ble PM’s helicopter travel is condemned. It's as per protocol. Our PM Narendramodi Ji dared to land in Pakistan mid air unscheduled. Recall Vaiko’s illegal pirated boat travelling to Srilanka in the past? is it not cowardice Vaiko?

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற