மாவீரன் போல பேசும் இளங்கோவன் மீது மாவட்டம் தோறும் வழக்கு: தமிழிசை ஆவேசம்
சென்னைஜெயலலிதாவை கொச்சைப்படுத்திப் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனின் கட்சி பதவியை பறிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடியின் சந்திப்பு பற்றி கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை கண்டித்து பாஜகவினர் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

இளங்கோவன்
ஒரு தலைவர் பேசும் பேச்சா இது. அதுவும் மாவீரன் போன்று பேசுகிறார். மன்னிப்பு கேட்க மாட்டாராம். எடுப்பது வாந்தி, அப்படி இருக்கையில் வாந்தியை எப்படி உள்ளே எடுக்க முடியும். அவர் ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தி பேசியுள்ளார்.

சோனியா
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ஒரு பெண் தானே. அவர் தன்னைப் போன்ற ஒரு பெண்ணை கொச்சைப்படுத்திய இளங்கோவனின் கட்சி பதவியை பறிக்க வேண்டும்.

குஷ்பு
குஷ்புவின் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பதவியையும் பறிக்க வேண்டும். இளங்கோவனின் செயலை கண்டித்து சோனியா காந்தி அறிக்கை வெளியிட வேண்டும்.

வழக்கு
பெண்ணியம் பற்றி பேசுபவர்கள் எல்லாம் எங்கே சென்றுவிட்டார்கள் என கேட்கிறேன்? இளங்கோவன் சீப் விளம்பரம் தேடுகிறார். அவர் மீது மாவட்டம் தோறும் வழக்கு தொடரப்படும் என்றார்.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications