எச்.ராஜா, எஸ்வி சேகருக்கு எதிராக பாஜக தலைமைக்கு கடிதம் எழுதினாரா தமிழிசை?
பாஜக பிரமுகர்களான எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகர் மீது பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கட்சி தலைமையிடம் புகார் அளித்ததாக செய்திகள் வந்துள்ளன.
சென்னை: பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மற்றும் பாஜக உறுப்பினர் எஸ்.வி.சேகர் ஆகியோரின் சர்ச்சைக்குரிய பேச்சுகளால் அதிருப்தி அடைந்த தமிழிசை அவர்கள் குறித்து கட்சி மேலிடத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவலை தமிழிசை மறுத்துள்ளார்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைரமுத்து ஆண்டாள் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும் வைரமுத்துவை எச்.ராஜாவும், எஸ்வி சேகரும் கடுமையாக விமர்சித்தனர். அதேபோல் எச்.ராஜாவின் தந்தை கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடியபோது விஜயேந்திரர் எழுந்து நிற்க வில்லை என்ற சர்ச்சை ஏற்பட்டது. இதற்கு கடந்த 2010-ஆம் ஆண்டு முதுகில் ஆபரேஷன் செய்தபோது ஒரு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது கருணாநிதி எழுந்து நிற்காதது குறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் எச்.ராஜா பரப்பினார்.
இதற்கு அவரை கழுவி கழுவி ஊற்றினர். இதுபோல் தொடர்ந்து பாஜக மீது மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் எச் ராஜா மற்றும் எஸ் வி சேகர் ஆகியோர் மீது அதிருப்தி அடைந்த தமிழிசை கட்சி மேலிடத்தில் புகார் செய்ததாக தகவல்கள் கிடைத்தன.
இதுகுறித்து தமிழிசையிடம் கேட்டபோது அவர் கூறுகையில் எஸ்.வி.சேகர், எச்.ராஜா மீது எந்த அதிருப்தியும் இல்லை. பாஜக தலைமைக்கு எந்த கடிதத்தையும் நான் அனுப்பவில்லை.
கட்சி பலமடைந்து விடக்கூடாது என்பதற்காக இதுபோன்ற வதந்திகளை சிலர் பரப்பி வருகின்றனர் என்றார் தமிழிசை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications