ரஜினி யாருடன் கூட்டணி சேருவார் ? தமிழிசை சொல்ல வருவது இதுதான் !
ரஜினி மாநிலக் கட்சியோடு சேர்வதும் தேசியக் கட்சியோடு சேர்வதும் ஆண்டவனிடமே நான் விட்டு விடுகிறேன் என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி: ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து எந்த கட்சியுடன் கூட்டணி சேர்வார் என்பதை ஆண்டவன்தான் முடிவு செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவரா என்ற மில்லியன் கேள்வி தற்போது எழுந்துள்ளது. அப்படி ஒரு வேளை அவர் அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சி தொடங்குவாரா அல்லது வேறு எதாவது கட்சியுடன் கூட்டணி அமைப்பார என பல்வேறு சர்ச்சைகள் பரவி வருகின்றன. ஒருபுறம் ரஜினியின் வருகைக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் நிலவும் மின் வெட்டு பிரச்சினையைப் போக்க தமிழக அரசை விட மத்திய அரசு அதிக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தமிழகத்தில் 56 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.
கார்த்தி சிதம்பரம் வீட்டில் சோதனை நடைபெற்ற போது அவர்கள் ஆதரவு கூட்டணி கட்சிகள் ஜனநாயகப் படுகொலை, காழ்ப்புனர்ச்சியால் பாஜக இவ்வாறு செய்கிறது எனக் கூறினார்கள். ஆனால் முகர்ஜி வீட்டில் 300 கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது அவர் லண்டன் சென்றிருக்கிறார். இதற்கு ஆதரவுக் கட்சியினர் என்ன சொல்லப் போகிறீர்கள்.
ஊழல் யார் செய்தாலும், பாஜகவினராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். ஊழல் விசாரணை வளையத்தில் கொண்டுவரப்படுவார்கள். பிரதமர் யாரை சந்திக்க வேண்டும் என திட்டமிட்டு சந்தித்து வருகிறார். விவசாயிகளுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஒரு சிலர் திட்டமிட்டு அவருக்கு கலங்கம் ஏற்படுத்த வகையில் உள் நோக்கத்துடன் செயல்படுகின்றனர்.
ரஜினிகாந்த் பாஜகவிடம் சென்றுவிடுவார் என்ற அச்சத்தில் ஸ்டாலினும், திருமாவளவனும் ஏன் பதறுகிறார்கள். அரசியலுக்கு வருவது குறித்து ஆண்டவன் முடிவு செய்வார் என ரஜினிகாந்த் கூறுவதை போல் அவர் மாநிலக் கட்சியோடு சேர்வதும் தேசியக் கட்சியோடு சேர்வதும் ஆண்டவனிடமே நான் விட்டு விடுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications