தமிழகத்தின் உரிமையை பெற்றத்தர பாஜக துணை நிற்கும்... தமிழிசை உறுதி!
காவிரியில் தமிழகத்தின் உரிமையை பெற்றுத் தர தமிழக பாஜக துணை நிற்கும் என்று அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக பாஜகவை பொறுத்தமட்டில் தமிழகத்தின் உரிமையை பெற்றுத் தர முழுமையான ஈடுபாட்டுடனும், ஆதரவுடனும் இருக்கும் என்று அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உறுதியளித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : விஞ்ஞானப்பூர்வமான வேளாண் நிலைமையை நாம் கொண்டு வர வேண்டும். 36 கிளைகள் காவிரியில் இருக்கின்றன, அதில் கிளை அணைகள் கட்டி நீரை சேமிக்க வேண்டும், நீர்நிலைகளை தூர்வாற வேண்டும்.
நிறுவனங்களுக்கு நீரை கொடுக்கும் போது கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். நீர் மேலாண்மை செய்து குறைவான நீரில் நிறைவான பயிர் உற்பத்தி செய்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

தமிழக நலனில் அக்கறை
கட்சிகளின் எல்லை கடந்து அத்தனை தலைவர்களும் தமிழகத்தின் நலனுக்காக அக்கறையுடன் கலந்து கொண்ட கூட்டம். தமிழக பாஜகவை பொறுத்தமட்டில் தமிழகத்தின் உரிமையை பெற்றுத் தர முழுமையான ஈடுபாட்டுடனும், ஆதரவுடனும் இருக்கும் என்பதை தெளிவாகச் சொல்லி இருக்கிறேன்.

மத்திய அரசின் தீர்ப்பல்ல
உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசின் தீர்ப்பாக பார்ப்பது சரியான பார்வையாக இருக்கிறது. காவிரி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசின் தீர்ப்பாக கருத முடியாது, கர்நாடக காவிரி அரசு இது வரை நமக்கு முழுமையாக 50 டிஎம்சிக்கு மேல் காவிரி நீரை கொடுத்ததே கிடையாது.

சட்ட அணுகுமுறை வேண்டும்
இன்று நமது உரிமை நிலைநாட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் நமக்கான நீரின் அளவு குறைக்கப்பட்டது எந்த வகையிலும் நியாயம் இல்லை, நிலத்தடி நீர் மட்டம் உண்மையிலேயே உயர்ந்திருக்கிறதா என்பதை பார்த்து அதிலும் சட்ட அணுகுமுறையை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

பாஜக துணை நிற்கும்
வேளாண் துறையில் பல முன்னேற்றங்களை கொண்டு வர வேண்டும், பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் சொட்டு நீர் பாசன முறையை சிறப்பாக செயலாற்றி வருகின்றனர். அவற்றையெல்லாம் நாம் மேம்படுத்த வேண்டும், தமிழகத்தின் உரிமையை பாதுகாப்பதில் தமிழக பாஜக உறுதியோடு இருக்கும் என்பதை அனைத்துக்கட்சி கூட்டத்தில் நாங்கள் உறுதியோடு தெரிவித்திருக்கிறோம் என்றும் தமிழிசை கூறினார்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
'பவர்’ தந்த மக்களுக்கு ’பவர்கட்’ பரிசு.. என்ன துறை என்றே தெரியாத அமைச்சர்கள்! விட்டு விளாசிய தமிழிசை -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications