பேசுவது மாநில சுயாட்சி, வழக்கு நடத்த மட்டும் வடநாட்டு வக்கீலா?... திமுகவை கேட்கும் தமிழிசை!
மாநில சுயாட்சி பேசுவதை வழக்கமாக வைத்துக் கொண்டு, வழக்கில் வாதட மட்டும் வடநாட்டு வழக்கறிஞரா என்று திமுகவை தமிழிசை சவுந்திரராஜன் விமர்சித்துள்ளார்.
சென்னை : மாநில சுயாட்சி பேசுவதை வழக்கமாக வைத்துக் கொண்டு வழக்கு நடத்த மட்டும் வடநாட்டு வழக்கறிஞரா என்று திமுகவை சாடி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
முதல்வர் பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் பங்கேற்று இரண்டு முறை வாதாடியுள்ளார். இந்நிலையில் திமுகவை சாடி தமிழிசை இந்த கருத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
|
வாய்தா வக்கீல்கள்
தமிழிசை சவுந்திரராஜன் டவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்தில் கூறியுள்ளதாவது : வழக்கமாக பேசுவது மாநில சுயாட்சி, வழக்கு நடத்த மட்டும் வடநாட்டு வழக்கறிஞரா. தமிழா! தமிழா! வாய்தா வாங்கத்தான் நம்ம ஊர்வக்கீல்? வக்கற்றவர்களா நாம்? என்று கேட்டுள்ளார்.
|
நவோதயா பள்ளி
திமுக கிராமத்து ஏழைகளுக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கு தரமான இலவச கல்வி தரும் நவோநயாபள்ளிகளை எதிர்ப்பார்கள் சிபிஎஸ்சி மெட்ரிக்பள்ளி நடத்துவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
|
கனவு பலிக்காது
ஆளுநரை கண்டித்து திமுகவினர் நிறைவேற்றியுள்ளனர். திமுகவின் கனவு ஒருபோதும் பலிக்காது என்று பதிவிட்டுள்ளார்.

காவிரி பிரச்சினை
மத்தியில் 18 ஆண்டுகளும், தமிழகத்தில் 25 ஆண்டுகளும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக, காவிரி பிரச்சனையை ஏன் தீர்க்கவில்லை? என்றும் தமிழிசை கேட்டுள்ளார். காவிரி பிரச்சனையில் திமுக வின் கடந்த கால துரோக வரலாறை மறக்கமுடியுமா? அந்தத் துரோகம் காரணமாகவே இன்று சிக்கலை சந்திக்க நேரிட்டுள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.
|
எங்கே போனது
இதே போல திருமாவளவனை கேள்வி கேட்டுள்ளார். இலங்கைத்தமிழர்களை கொன்று குவிக்க துணைநின்ற சோனியாகாங்கிரசை தேடிச்சென்றுசுயாட்சிக்கு துணைதேடும் திருமா!எங்கே போனது இலங்கைத்தமிழர் மீதானபாசம்? என்று பதிவிட்டுள்ளார்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications