For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலாம் சிலைக்குப் பக்கத்தில் பகவத் கீதை.. தமிழிசையோட விளக்கத்தைப் பாருங்க!

அப்துல்கலாம் சிலை அருகில் பகவத் கீதை புத்தகம் வைக்கப்பட்டுள்ளதை வைகோ அரசியலாக்குகிறார் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

காரைக்குடி: ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் மணிமண்டபத்தில் பகவத்கீதை புனித நூல் வைக்கப்பட்டுள்ளதை வைகோ அரசியலாக்குவதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

காரைக்குடியில் மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பாஜக நிர்வாகிகள் இன்று காரைக்குடிக்கு வந்தனர்.

Tamilisai statement about Vaiko bhagawath geeta

செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், செயற்குழு கூட்டத்தில் கட்சியைப் பலப்படுத்தத் தேவையான அனைத்து முயற்சிகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய தமிழிசை சவுந்தரராஜன், குஜராத், உத்தரபிரதேசம், பீகார் போல பல மாநிலங்களில் பாஜகவின் செல்வாக்கு அதிகரிக்கும் என்றார்.

பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக மாறி வருகிறது என்று கூறிய தமிழிசை, காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாகி வருவதாக தெரிவித்தார்.

அப்துல்கலாம் நினைவிடத்தில் பகவத் கீதை வைத்துள்ளதை வைகோ அரசியலாக்குவதாக கூறினார்.
தமிழக உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனது சக்தியை நிரூபிக்கும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

English summary
BJP state president Tamilisai said that Vaiko is politicizing the book of Bhagwad Geeta near Abdul Kalam's sculpture.Vaiko Questions on Bhagawat Geeta's presence in Kalam's Memorial.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X