ஜெயிலுக்கு போறவங்க மத்தியில் வெயிலில் ஓட்டு கேட்கிறோம்... வெற்றி பாஜகவுக்கே - தமிழிசை பஞ்ச்
ஆர். நகர் தொகுதியில் பணத்தை வாரி இறைத்தாலும் ஆர்.கே.நகரில் வெற்றி எங்களுக்குத்தான் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை: வாக்காளர்களுக்கு பணத்தை வாரி வாரி கொடுத்தாலும் வெற்றி பாஜகவுக்குத்தான் கிடைக்கும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை ஆர்.கே.நகரில் வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பாஜக வேட்பாளராக கரு.நாகராஜன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, தமிழக பாஜக தலைவர் தமிழிசை வாக்கு சேகரித்தார்.
காய்கறிகடைகளில் காய் வாங்கியும், பூக்கடைகளில் பூக்களை வாங்கியும் மக்களிடம் தாமரைக்கு வாக்களிக்க பிரசாரம் செய்தார்.

கரு நாகராஜன்
தோசை கடையில் தோசை சுட்டும், பூரி கடைகளில் பூரி சுட்டுக்கொடுத்தும் வாக்கு சேகரிக்கிறார் வேட்பாளர் கரு நாகராஜன். மக்கள் கூடும் இடங்களில் மக்களோடு மக்களாக கலந்து வாக்கு சேகரிக்கிறார் கரு நாகராஜன்.

தமிழிசை குற்றச்சாட்டு
செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் ஆர்.கே.நகர் தொகுதி முழுதும் பணப் பட்டுவாடா நடக்கிறது. வாக்காளர்களை வேறு தொகுதிக்கு அழைத்து பட்டுவாடா செய்கின்றனர்.

ரைமிங் பஞ்ச்
ஜெயிலுக்கு சென்றவர்கள், ஜெயிலுக்கு போக வேண்டியவர்கள் மத்தியில், நாங்கள் வெயிலில் ஓட்டு சேகரிக்கிறோம். வாக்காளர்கள், பணம் வாங்கி கொண்டு ஓட்டு அளிக்க கூடாது. அப்படியே பணம் வாங்கினாலும், பாஜகவுக்குத் தான் ஓட்டளிப்பார்கள் என்றார்.

சொன்னது பலிக்குமா?
தமிழிசை சவுந்தராஜன் கடந்த முறை ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட போது தேர்தல் ரத்தாகும் என்றார். இலை முடங்கும் என்றும் கூறினார். அதே போலவே நடந்தது. பலரும் அவரை ஜோதிடர் என்றே கிண்டல் செய்தனர். இந்த முறை ஜெயிலுக்கு போக வேண்டியவர்கள் மத்தியில் வெயிலில் ஓட்டு கேட்கிறோம் என்கிறார். தினகரன் மீண்டும் ஜெயிலுக்கு போய் விடுவாரோ? ஆருடம் பலிக்குமா? பார்கலாம்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்










Click it and Unblock the Notifications