ஆளுநர் ஏன் அப்படி சொன்னார்? தமிழிசை விளக்கம்
சென்னை: அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது என ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூறியிருப்பது குறித்து பாஜக தலைவர் தமிழிசை தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழிசை கூறுகையில், ஆளுநர் சொல்லியிருப்பது சரிதான். அதிமுகவின் ஒரு பிரிவினர் முதல்வரை மட்டுமே மாற்றக் கூறுகிறார்கள். எனவே இது உட்கட்சிப் பிரச்சினை என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையை அதிமுகவினர்தான் சரி செய்ய வேண்டும். உட்கட்சிப் பிரச்சினைகளில் எப்படி ஆளுநர் தலையிட முடியும்? அதைத்தான் அவர் தெளிவாக சொல்லியுள்ளார் ஆளுநரைப் பொருத்தவரை உட்கட்சிப் பிரச்சினைகளில் நிறைந்த அனுபவம் வாய்ந்தவர். சூழலை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதில் அனுபவம் வாய்ந்தவர்.
இங்குள்ள அரசியல்வாதிகள் விருப்பத்திற்கேற்ப அவர் செயல்பட வேண்டிய அவசியம் இல்லை. அவர் சொன்னபடி இது உட்கட்சி பிரச்சினை அவ்வளவுதான். இவ்வாறு தமிழிசை கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications