நிவாரண முகாம்கள் குறித்த தகவல்களை ரேடியோ, டிவிகளில் ஒளிபரப்ப தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தல் !

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு அமைத்துள்ள நிவாரண முகாம்கள் எங்கு அமைக்கப்பட்டுள்ளன என்ற விவரத்தை ரேடியோ, டிவிகளில் தொடந்து ஒளிபரப்பினால் பொது மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்வதற்காக அவசர உதவிக்கு சில தொலைபேசி எண்களை கொடுத்து தொடர்பு கொள்ள ஏற்பாடுகள் செய்து இருக்கிறது என்பது ஆறுதல். ஆனால், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்கள் எங்கே இருக்கிறது என்ற விவரம் தெரியவில்லை.

tamilisai urged relief camps details have announced by radio, TV

மக்களை வெள்ள பகுதியில் இருந்து அப்புறப்படுத்துவதில் அதிகாரிகள் ஈடுபட்டு இருந்தபோதிலும், நிவாரண முகாம்கள் எங்கெங்கு அமைக்கப்பட்டு இருக்கிறது என்ற தகவல்கள் வானொலி, தொலைகாட்சி, ஊடங்கங்களில் தொடர்ந்து ஒளிபரப்பினால் உதவியாக இருக்கும்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போதுமான அவசர உதவி ஆம்புலன்ஸ் சேவை நடமாடும் பேரிடர் மீட்பு உதவி குழுக்கள் அழைத்த உடன் வரும் வகையில் தொடர்புக்கு வேண்டிய விவரங்கள் விளம்பரபடுத்த வேண்டும்.

வாகன நெரிசலை குறைக்க அரசு பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்க பட வேண்டும் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+