ஆர்கே நகர் இடைத் தேர்தல் ரத்துக்கு தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்பு!
ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தல் ரத்து செய்யபப்ட்டுள்ளதை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்றுள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்றுள்ளார். பணத்துக்கு வாக்கு எனும் பார்முலாவுக்கு ஆர்கே நகரில் முடிவு கட்டப்பட்டுள்ளது எனவும் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட புகார்களைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. அதிமுக (அம்மா) அணியின் வேட்பாளர் டிடிவி தினகரன் ஆதரவு அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை ஆவணங்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த முடிவை தேர்தல் ஆணணயம் அறிவித்துள்ளது.

மேலும் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட இருந்த ரூ31.91 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் 74 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த தேர்தல் ரத்து அறிவிப்பை ஜனநாயகப் படுகொலை என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்றுள்ளார். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் பார்முலாவுக்கு ஆர்கே நகரில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது எனவும் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications