பிளஸ் 2வில் தமிழ், ஆங்கிலத்தில் யாரும் சென்டம் இல்லை- காரணம் என்ன?
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த ஆண்டு தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழி பாடங்களில் யாரும் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுக்கவில்லை.
சென்னை: தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. 9 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்த தேர்வில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழி பாடங்களில் யாரும் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுக்கவில்லை.
முந்தைய ஆண்டுகளில், 100க்கு, 100 மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பலர், தமிழில் சரிவர எழுத சிரமப்பட்டதும், பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளில், தமிழில் திணறியதும் தெரிந்தது. எனவே, மொழி பாடத்தில், 'சென்டம்' மதிப்பெண் வழங்க, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சென்டம் வழங்க, பல கட்ட மறுமதிப்பீடு செய்ய உத்தரவிடப் பட்டுள்ளது. உச்சகட்டமாக, இந்த ஆண்டு, 10ஆம் வகுப்பில் 100 மதிப்பெண் வழங்குவதையே, தேர்வுத்துறை ரத்து செய்துள்ளது.
அதே முறையே பிளஸ் 2 விடைத்தாள் திருத்துவதிலும் கடைபிடிக்கப்பட்டது. இதனையடுத்தே இந்த ஆண்டு தமிழ், ஆங்கில மொழி பாடங்களில் யாருக்குமே 200க்கு 200 வழங்கவில்லை.
பத்தாம் வகுப்பிலும் 100க்கு 100 கிடையாது என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதாவது, விடைத்தாளில், இறுதி மதிப்பெண் வழங்கும் முகப்புபக்க சீட்டில், 100 மதிப்பெண் இடுவதற்கான கட்டம் மாற்றப்பட்டு, 99 என்ற இரண்டு இலக்கம் எழுதும் வகையில், மாற்றப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பிலும் இந்த ஆண்டு தமிழ், ஆங்கிலத்திற்கு, சென்டம் மதிப்பெண் இருக்காது, என தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications