108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் !
சென்னை: தீபாவளி போனஸ் தொடர்பான பேச்சுவார்த்தையில் இன்று உடன்பாடு ஏற்பட்டதால் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அறிவித்திருந்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
தீபாவளி போனஸ் வழங்கக்கோரி 108 ஆம்புலன்சில் பணிபுரியும் ஊழியர்கள் வருகிற 8-ந் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து தொழிலாளர் நல ஆணைய அதிகாரிகள் 108 ஆம்புலன்ஸ் சேவையை அளிக்கும் ஜிவிகே இஎம்ஆர்ஐ நிர்வாகத்திடமும், ஊழியர்களிடமும் நவம்பர் 3-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து இன்று காலை மீண்டும் தொடங்கிய பேச்சுவார்த்தை இரவு வரை நீடித்தது. பேச்சுவார்த்தையின் முடிவில் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று போனஸ் வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து ஊழியர்கள் அறிவித்திருந்த காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது என ஜிவிகே இம்எம்ஆர்ஐ நிறுவனத்தின் மண்டல மேலாளர் பிரபுதாஸ் தெரிவித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications