சென்னையில் தலித் மக்களுடன் சேர்ந்து உணவு சாப்பிட்ட தமிழிசை
சென்னை: தாழ்த்தப்பட்ட மக்களோடு ஒன்றாக அமர்ந்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உணவு சாப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம், சென்னை, எழும்பூரில் உள்ள 'திடீர் நகர்' பகுதிக்கு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்றார். அங்குள்ள தலித் மக்களிடம் கலந்துரையாடிய அவர், பாஜக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடும் இயக்கம் என, தெரிவித்ததோடு, தலித் மக்களுக்காக, மோடி அரசு அமல்படுத்தியுள்ள திட்டங்கள் பற்றியும் எடுத்துக் கூறினார். பின், அந்த மக்களுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டார்.

பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம், சமீபத்தில், அலகாபாத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற, தமிழக பாஜக தலைவர்களிடம், கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தனியாக அழைத்து பேசி, தமிழகத்தில், கட்சியை வளர்க்க வேண்டும் என்றால், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஆதரவை பெறும் வகையில், கட்சி தலைவர்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். தலித் மக்களின் வீடுகளுக்கு சென்று, அவர்களுடன் சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
அனைத்து மாநில பாஜக தலைவர்களும் தலித்துகளிடம் பேதம் பார்க்காமல் தங்களில் ஒருவராக அரவணைத்து செல்ல வேண்டும் என்றும் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். பாஜகவிலுள்ள சில மேல் ஜாதி என்று கருதப்படும் தலைவர்களுக்கு இதில் பெரிய வரவேற்பில்லை என்றபோதிலும், அமித் ஷா உத்தரவை தொடர்ந்து தங்கள் மனதை மாற்றிக்கொண்டு தலித் வீடுகளை நோக்கி செல்ல தொடங்கியுள்ளனர்.
-
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
அண்ணாமலை என்றால் சும்மாவா.. பாஜக ஆஃபர் தந்தும் ஏற்கலயாமே? உடையும் ஓட்டு? இன்று 12 மணிக்கு என்னாகுமோ -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்












Click it and Unblock the Notifications