For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விஜய பாஸ்கரோடு சேர்ந்து சரத்குமார் வீட்டிலும் ஐடி சோதனை நடந்தது ஏன்? பின்னணியில் '10 சி'

சரத்தை மாட்டிவிட்டது தமிழக பா.ஜ.க.தலைவர்கள் தான் என்பதே விவரம் அறிந்தவர்களின் கருத்தாக உள்ளது.

By Raj
Google Oneindia Tamil News

சென்னை: சரத்குமார் வீட்டில் ஐடி ரெய்டு நடத்தியது ஏன் என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

ஆர்.கே.நகரில், சரத்குமார் கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த பிரதான வேட்பாளர் மற்றும் மாற்று வேட்பாளரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், எந்த கட்சிக்கு சரத் ஆதரவளிப்பார் என்ற கேள்வி எழுந்த நிலையில், அவரை திமுக, பா.ஜ.க. கட்சிகள் அணுகின.

குறிப்பாக, பா.ஜ.க. தமிழக தலைவர்கள் , பா.ஜ.க.வை ஆதரிக்க வேன்டும் என அழுத்தம் கொடுத்தனர். தமிழிசை , தனிப்பட்ட உரிமை எடுத்தும் பேசிபார்த்தார்.

பாஜக ஆதரவு

பாஜக ஆதரவு

பாஜகவை ஆதரிப்பதற்காக 10 கோடி கேட்டு 7 கோடியில் சரத்குமார் நின்றதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. சரி என சொல்லியது பா.ஜ.க.! பணம் கைக்கு வந்த பிறகே களத்துக்குள் இறங்குவேன்; ஆதரிப்பதாக அப்போதான் சொல்வேன் என்று சரத் கூறியதாக தெரிகிறது. முந்தைய தேர்தலலில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததில் தொகை விசயத்தில் ஏற்பட்ட ஏமாற்றம் அவரை இப்படி கறார பேச வைத்தது என்கிறார்கள் அக்கட்சி வட்டாரத்தில்.

பாஜக கஞ்சத்தனம்

பாஜக கஞ்சத்தனம்

ஆனால் பா.ஜ.க. சரத்குமாரின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முன் வராத நிலையில், ரூ.1 கோடி தரமுன்வந்தது. அதை சரத்தும் நிராகரித்தார். இந்த சூழலில் திமுகவும் சில மீடியெட்டர்கள் மூலம் இதே பானியில் பேச, பணத்துக்கு உத்தறவாதம் இல்லாத நிலையில் திமுகவையும் புறந்தள்ளினாராம் சரத்குமார். அப்போதுதான் இந்த விவகாரத்தையறிந்த தினகரன், விஜயபாஸ்கர் மூலம் தூண்டில் வீச, இறை கிடைத்த சந்தோஷத்தில் மாட்டிக்கொன்டது மீன்.

சிக்கியது மீன்

சிக்கியது மீன்

உடனே தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தார் சரத். அதை பார்த்துதான், நம்மிடம் வராமல் தினகரனை ஆதரிக்கிறாரா?,அப்படியானால் நம்முடம் பேசிய அதே பேரத்தை அங்கு அவர் நடத்தியிருப்பார், காரியம் சக்சஸ் ஆகியிருக்கும் என கணக்குப்போட்ட தமிழக பா.ஜ.க., இதனை டெல்லிக்கு அழுத்தம் கொடுத்தது.

ஜாதி வாக்கு முக்கியமே

ஜாதி வாக்கு முக்கியமே

நாடார் வாக்குகள் பா.ஜ.க.வுக்கு கிடைக்காமல் போனால், பாஜக தலைவர் தமிழிசை, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் என நாடார் குல தலைவர்கள் தமிழகத்தில் இருந்தும் நாடார் வாக்குகளை உங்களால் வாங்க முடியவில்லையெனில் நீங்கள் எதற்கு பதவியில் இருக்க வேண்டும் என டெல்லி குடையும் என்ற பிரச்சனையால் தான் சரத்குமாரை போட்டுக் கொடுத்துள்ளனர்.

உள்குத்து

உள்குத்து

ஏற்கனவே தினகரன் தரப்பை ஒழிக்க வேன்டும் என கங்கணம் கட்டி வரும் பா.ஜ.க தலைமை, சரத்தையும் ரெய்டு வளையத்துக்குள் கொண்டு வந்தது. இதுதான் அவர் வீட்டில் ரெய்டுக்கான பின்னணி என்கிறார்கள். அதே சமயம் தோண்ட தோண்ட பூதங்கள் கிளம்பி வருகிறது. ஆக, சரத்தை மாட்டிவிட்டது தமிழக பா.ஜ.க.தலைவர்கள் தான் என்பதே விவரம் அறிந்தவர்களின் கருத்தாக உள்ளது.

English summary
Tamilnadu BJP leaders are behind the IT raids which is held in SarathKumar residence on April 7th, says sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X