தமிழகத்தில் 3 நாட்களுக்கு பரவலாக மழை இருக்கும்.. வானிலை மைய அறிவிப்பால் மக்கள் ஆறுதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள வானிலை மையம், தமிழகத்தில் வரும் 12, 13, 14 ஆகிய தேதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.

Tamilnadu capital dose not havig summer rain.. chennai People lament

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கத்திரி வெயில் வாட்டி வதைக்கிறது. பல இடங்களில், 38 டிகிரி செல்சியஸ் முதல், 44 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகிறது. தமிழகத்தில் அனல் காற்றும் சேர்ந்து வீசுவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்த அனல் காற்றுக்கு இடையே தமிழகத்தின் சில பகுதிகளில் பெய்யும் கோடை மழையால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். மதுரை, கிருஷ்ணகிரி, நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது.

இதனிடையே அடுத்து வரும் 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக மதுரை, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்ய கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

தலைநகர் சென்னையை பொறுத்த வரை சில நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தலைநகரவாசிகள் கவலையடைந்துள்ளனர்.

கோடை வெயிலால் கால்நடைகளுக்கு கூட தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் நிலையில், பரவலாக மழை பெய்யும் என்ற வானிலை மையத்தின் தகவலால் பிற பகுதி மக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+