ஆளுநர், முதல்வர் சந்திப்பு நிறைவு.. தமிழக போராட்டங்கள் குறித்து விவாதித்தனர்!
உயரதிகாரிகளுடன் தமிழக முதல்வர் பழனிச்சாமி திடீர் ஆலோசனை நடத்தி உள்ளார்.
சென்னை: தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் குறித்து ஆளுநரிடம் தமிழக முதல்வர் பழனிச்சாமி நேரில் சந்தித்து விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
தமிழகம் முழுக்க காவிரி பிரச்சனை, ஸ்டெர்லைட் பிரச்சனை, நியூட்ரினோ பிரச்சனை காரணமாக போராட்ட களமாக மாறியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இதனால் சென்னையில் உயரதிகாரிகளுடன் தமிழக முதல்வர் பழனிச்சாமி திடீர் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி கலந்து கொண்டனர்.

எதிர்க்கட்சிகள் நாளை முழுஅடைப்பு போராட்டம் நடத்த உள்ள நிலையில் ஆலோசனை நடைபெற்றது. மக்கள் போராட்டம் குறித்து இதில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அதன்பின் தமிழக முதல்வர் பழனிச்சாமி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார்கள். அவருடன் துணை முதல்வர் ஓ.பி.எஸ், சட்ட அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.
தற்போது தமிழக ஆளுநர், முதல்வர் சந்திப்பு நிறைவு பெற்று இருக்கிறது. இதன்பின் பேட்டி அளித்த முதல்வர் ''தமிழக போராட்டங்கள் குறித்து ஆளுநரிடம் பேசினோம். தமிழக நிலவரங்களை ஆளுநரிடம் எடுத்துரைத்தோம். எங்களது பதில்கள் அவருக்கு திருப்திகரமாக இருந்ததால் ஆளுநர் திருப்தி அடைந்தார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
-
விஜய் கொஞ்சம் அட்ரஸை மாற்றி அனுப்பி இருந்தால்.. பிரச்சனை சரி ஆகி இருக்கும்! மேகதாது கேசில் சொதப்பல் -
ஒரே ட்வீட்.. உதயநிதி, எடப்பாடி டோட்டல் டேமேஜ்.. காவிரி விவகாரத்தில் மாணிக்கம் தாகூர் நறுக் -
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
“காவிரி அரசியல் ஆயுதம் அல்ல!” கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு.. மாணிக்கம் தாகூர் கண்டனம் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications