‘குடி’மகன்கள் கைவிட மாட்டார்கள்... தஞ்சையில் களமிறங்கும் மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம்!
தஞ்சை: தஞ்சாவூர் தொகுதி சட்டசபைத் தேர்தலில் ஆறுமுகம் என்ற வேட்பாளரை மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் களமிறக்குவதாக அறிவித்துள்ளது.
கடந்த மே மாதம் நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலின் போது, தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் பெருமளவில் பணம் வினியோகிக்கப்பட்டதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அங்கு தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. பிற தொகுதிகளுக்கு மட்டும் அறிவித்த தேதியில் தேர்தல் நடந்தது.

தேர்தல் முடிந்ததும் திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேடபாளர் சீனிவேல் மரணமடைந்ததால், அந்தத் தொகுதிக்கும் சேர்த்து 3 தொகுதிகளுக்கும் வருகிற நவம்பர் 19ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று தொகுதிகளுக்கும் அதிமுகவும், திமுகவும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து விட்டனர்.
இந்நிலையில், தஞ்சை தொகுதியில் தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கமும் தங்களது வேட்பாளரை களமிறக்க முடிவு செய்துள்ளது. இந்தத் தொகுதியில் தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் சார்பாக ஆறுமுகம் (49) என்ற வேட்பாளர் களமிறங்குகிறார்.

இது தொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்லப்பாண்டியன் கூறுகையில், "தஞ்சையில் தற்போது விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் வாடினாலும், 'குடி'மகன்கள் தாராளமாக தண்ணீரில் (மதுவில்) மிதக்கின்றனர். எனவே, நிச்சயம் அவர்கள் எங்கள் வேட்பாளரை வெற்றி பெறச் செய்வர் என்ற நம்பிக்கை இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் திமுக சார்பில் மருத்துவரான அஞ்சுகம் பூபதி போட்டியிடுகிறார். இதேபோல் அதிமுக சார்பில் ரெங்கசாமி அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications