For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆர்.கே.நகர் தொகுதியில் விவசாயிகள் திடீர் சாலை மறியல்..

Google Oneindia Tamil News

சென்னை: இடைத் தேர்தல் நடைபெறும் ஆர்.கே.நகர் தொகுதியில்
விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இடைத்தேர்தல் நடைபெறும் ஆர்.கே.நகரில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் நாளை (வியாழக்கிமை) பிரச்சாரம் முடிவடையும் நேரத்தில் திடீரென தேசிய நதிநீர் இணைப்பு இயக்கத்தைச் சார்ந்த விவசாயிகள் தங்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

farmers protest

டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பொய்த்துப் போனதால், குறுவை சாகுபடிக்காவது மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று அவர்கள் தமிழக அரசை வலியுறுத்தினர்.

விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் தேக்கமடைந்தன.

இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட விவசாளிகளை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். இதையடுத்து அங்கு சகஜ நிலை திரும்பியது.

English summary
Tamilnadu farmers staged protest in RK.Nagar to urge the Government to open mettur dam for Kuruvai crop
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X