கடல் காற்று அதிகமாக இருக்கும்.. பல அடி உயரத்துக்கு அலைகள் எழும்பும்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை!
கடல் சீற்றம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை: கடல் சீற்றம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, நெல்லை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

பலத்த காற்று இடியுடன்
இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

உள்மாவட்டங்களில்
மேலும் நீலகிரி, தேனி, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் கனமழை நீடிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் உள் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50-60கிமீ வேகத்தில்
கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தென்மேற்கு திசையில் இருந்து 50-60 கி.மீ வேகத்தில் தான் தமிழகத்தில் காற்று வீசக்கூடும்.

கடல் அலை அதிக உயரம்
குளச்சல் முதல் கீழக்கரை வரை தென் தமிழகத்தில் கடல் அலைகள் 3.3 முதல் 4.3 அடி வரை எழும்ப வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகளவாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு












Click it and Unblock the Notifications