தமிழகத்தில் அதிக விலைக்கு வெளிநாட்டவருக்கு விற்கப்படும் உடல் உறுப்புகள்... அதிர வைக்கும் ரிப்போர்ட்
Recommended Video

சென்னை: கேரள இளைஞர் மணிகண்டனின் உடல் உறுப்புகளை திருடியது குறித்து தமிழக முதல்வருக்கு கேரள அரசு எழுதிய கடிதத்தை அடுத்து மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த இளைஞர் மணிகண்டன். இவர் கள்ளக்குறிச்சி அருகே வாகனத்தில் சென்ற போது கடந்த மே 18-ஆம் தேதி விபத்தில் சிக்கினார்.
இதையடுத்து சேலத்தில் உள்ள மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதையடுத்து அவரது இதயம், நுரையீரல், சிறுநீரகம் ஆகியவை தானமாக தர உறவினர்கள் முன்வந்தனர்.

இதையடுத்து அவரது உடல்உறுப்புகள் சென்னையில் உள்ள இரு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனிடையே மணிகண்டனின் உடல்உறுப்புகள் திருடப்பட்டு விதிகளை மீறி வெளிநாட்டவருக்கு பொருத்தப்பட்டுள்ளது அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்தது.
இதையடுத்து மணிகண்டனின் உறுப்புகள் திருடப்பட்டதை உணர்ந்த உறவினர்கள் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் கடிதம் எழுதினார். அதில் உடல் உறுப்பு மோசடி குறித்து நடவடிக்கை எடுக்கும்படி கோரியிருந்தார். இதையடுத்து சுகாதாரத் துறை சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு மணிகண்டனின் உறவினர்கள், சென்னை மற்றும் சேலம் மருத்துவமனைகளில் விசாரணை நடைபெற்றது.
இதில் ஒருவருக்கு தானமாக கொடுப்பதாக கூறிவிட்டு அந்த உறுப்பை வெளிநாட்டவருக்கு அதிக விலைக்கு தானமாக பொருத்தியது தெரியவந்தது. அதுபோல் இதயத்தையும் உக்ரைன் நாட்டினருக்கு கொடுப்பதாக கணக்கு காட்டிவிட்டு லெபனான் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு பொருத்தப்பட்டுள்ளது.
நுரையீரலை தானமாக பெற உள்நாட்டை சேர்ந்த 5 நோயாளிகள் இருக்கும் போது அதை இஸ்ரேல் நாட்டவருக்கு பொருத்தியுள்ளனர். மேலும் தானமாக பெறப்பட்டதற்காக பராமரிக்கப்படும் பதிவேட்டில் எந்த வித குறிப்புகளையும் மருத்துவமனை நிர்வாகம் மேற்கொள்ளவில்லை.
மணிகண்டன் விவகாரம் மட்டுமல்லாமல் இதுபோல் வெளிநாடுகளுக்கு உறுப்புகள் தானமாக பொருத்தப்பட்டது தொடர்பான மோசடிகள் குறித்த அறிக்கையை அந்த குழு இன்று தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. இதையடுத்து மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications