தமிழ்நாட்டில் கூடுதலாக 70 மணல் குவாரிகளை தொடங்க தமிழக அரசு முடிவு
தமிழகத்தில் கூடுதலாக 70 மணல் குவாரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
சென்னை: தமிழகத்தில் கூடுதலாக 70 மணல் குவாரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. மணல் தட்டுப்பாட்டை போக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பெரிய அளவில் மணல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மணல்களின் அளவும் குறைந்து இருக்கிறது.

இதனால் இங்கு நிலவும் மணல் தட்டுப்பாடு குறித்து ஆலோசணை செய்வதற்காக தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று கூட்டம் ஒன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பல முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். 8 மாவட்டத்தை சேர்ந்த ஆட்சியர்கள், 5 மாவட்டத்தை சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் 70 புதிய மணல் குவாரிகளை தொடங்க வேண்டும் என இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கூடுதல் மணல் குவாரி அமைக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications