ப்ளஸ் 2 தேர்வு ரிசல்ட் நாளை காலை வெளியாகிறது.. எந்தெந்த வெப்சைட்டில் பார்க்கலாம்?
சென்னை: ப்ளஸ் 2 பொது நுழைவுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 1ம் தேதி வரை நடைபெற்றது. இதற்காக 2,421 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தத் தேர்வை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 6,550 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் எழுதினர்.
இதே போல், 10ம் வகுப்பு பொது தேர்வு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மார்ச் 15ம் தேதி முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை நடைபெற்றது. விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில், தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியை அரசு தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வ அறிவித்திருந்தது.

அதன்படி, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் 17ம் தேதியான நாளையும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 25ம் தேதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 17ம் தேதி நாளை, காலை 10.31 மணி முதல் 11 மணிக்குள் வெளியிடப்படும் என்றும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 25ம் தேதி காலை 9:31 முதல் 10 மணிக்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை, www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in.
உள்ளிட்ட இணையதளங்கள் உடனுக்குடன் மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும் என அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இது தவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் டூ, மார்க் ஷீட்டை www.dge.tn.nic.in என்ற வெப்சைட்டில் இருந்து வரும் 19ம் தேதி முதல் டவுன்லோடு செய்துகொள்ள முடியும். போலவே, பள்ளிகள் அல்லது தேர்வு எழுதிய மையங்களில் இருந்தும் பெற முடியும்.
மறு கூட்டலுக்கு விரும்புவோர் நாளை மற்றும் நாளை மறுதினம் அவர்கள் பயின்ற பள்ளி வழியே விண்ணப்பிக்கலாம். தனியார் மாணவர்கள் தங்கள் தேர்வு மையங்கள் வழியே விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் வேண்டுவோர், மறு கூட்டலுக்கு இப்போது விண்ணப்பிக்க கூடாது. அவர்களுக்கு பிறகு தேதி ஒதுக்கப்படும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications