Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாவோயிஸ்ட் ஊடுருவல்... தமிழக-கேரள எல்லையோர காவல்துறை அதிகாரிகள் அவசர ஆலோசனை!

Subscribe to Oneindia Tamil

செங்கோட்டை: நெல்லை-கொல்லம் ஆகிய மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் கேரள மாநிலம் ஆரியங்காவில் நடைபெற்றது.

கேரள மாநிலம் வயநாடு பகுதி வனப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாவோயிஸ்டுகள் மற்றும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதையடுத்து, தமிழக மற்றும் கேரள எல்லை பகுதிகள் உஷார்ப்படுத்தப்பட்டு பலத்த சோதனைகள நடைபெற்று வருகின்றன.

Tamilnadu police and Kerala police discuss on maoist issue

இந்த நிலையில் இருமாநில எல்லையோர மாவட்டமான நெல்லை-கொல்லம் ஆகிய மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் கேரள மாநிலம் ஆரியங்காவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு கொல்லம் மாவட்ட புறநகர் காவல்துறை கண்காணிப்பாளர் சுரேந்திரன் தலைமை தாங்கினார்.

நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நரேந்திரன் நாயர், புனலூர் டிஎஸ்பி அப்துல் ரபீக், சிறப்பு பிரிவு டிஎஸ்பி சலமான், க்ரைம் பிராஞ்ச் டிஎஸ்பி ஜேக்கப், வனத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் வனப்பகுதியில் இரு மாநில எல்லையோர மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் இணைந்து செயலாற்றிடவும் அதற்கு வனத்துறை, பொதுமக்களின் ஆதரவை பெறவும், புதிதாத வனப்பகுதியில் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கவும் கேட்டு கொள்ளப்பட்டது.

இதுகுறித்து நெல்லை எஸ்பி கூறும் போது முதல் கட்டமாக பாதுகாப்பு குறித்து இருமாநில எல்லையோர மாவட்ட அதிகாரிகள் கூட்டம் நடைபெறுகிறது. வனப்பகுதி அதிகம் உளள பகுதி என்பதால் இந்த ஆலோசனை கூட்டம் பாதுகாப்பு குறித்து நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+