ஓ.பி.எஸ்., தீபா, தீபக்.. ஜெயலலிதா பிறந்த நாளான இன்று காத்திருக்கிறது அரசியல் புயல்
இன்று பன்னீர்செல்வம் முடிவு என்னவாகும், தீபக் இன்று என்ன சொல்வார், தீபா என்ன சொல்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியை மையம் கொண்டு அரசியலில் பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறியதை போல, இன்று ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்வைத்து தமிழகத்தில் அரசியல் புயல்கள் பல மையம் கொள்ள உள்ளன.
தனது அத்தையான ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று மாலை 6 மணிக்கு தனது புதிய அரசியல் அமைப்பை தீபா அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக கட்சியை சசிகலா தரப்பு கபளீகரம் செய்துவிட்டதாக கோபத்திலுள்ள பன்னீர்செல்வம், இன்று முதல் மாநிலம் முழுவதும் வாகனத்தில் பயணம் செய்து மக்கள் மத்தியில் பிரசாரம் செய்ய உள்ளார். நீதி கேட்டு அவர் பயணத்தை ஆரம்பிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில்தான், தீபக் நேற்று, திடீரென ஒரு தொலைக்காட்சி சேனலை அணுகி, தன்னை பேட்டியெடுக்க கோரியுள்ளார். அதில், அதிமுக துணை பொதுச்செயலர் டி.டி.வி.தினகரனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி பேட்டிகொடுத்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தை அண்ணன் என அழைத்தார். தினகரனை கட்சியினர் ஏற்க மாட்டார்கள் என்றார்.
தீபாவுடன் தனக்கு கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என்றும் தீபக் தெரிவித்தார். இதுவரை அவர் எடுத்த நிலைப்பாட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது அவரது பேச்சு. பன்னீர்செல்வம் தனியாக பிரிந்து செல்வது அதிமுகவை அழித்துவிடும் என்பதால் தீபக்கை சசிகலா தூதுவிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அவரும், பன்னீர்செல்வத்திற்கு வலைவீசி பார்க்கிறார்.
எனவே இன்று பன்னீர்செல்வம் முடிவு என்னவாகும், தீபக் இன்று என்ன சொல்வார், தீபா என்ன சொல்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications